டாஸ் போட்டதும் ‘கோலி’ சொன்ன தகவல்.. உடனே ‘டிரெண்ட்’ ஆன ஒரு பெயர்.. கோப்பையை கைப்பற்றுமா இந்தியா..?
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇங்கிலாந்துக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் இந்தியா பேட்டிங் செய்து வருகிறது.

இந்தியா மற்றும் இங்கிலாந்துக்கு இடையேயான கடைசி ஒருநாள் போட்டி இன்று (28.03.2021) மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜாஸ் பட்லர் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார். அதன்படி முதலில் இந்திய அணி பேட்டிங் செய்து வருகிறது. தொடக்க ஆட்டக்காரர்களாக ரோஹித் ஷர்மா மற்றும் ஷிகர் தவான் களமிறங்கியுள்ளனர்.
முன்னதாக நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா 66 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனை அடுத்து நேற்று முன்தினம் புனே மைதானத்தில் நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது. இதனால் 1-1 என்ற கணக்கில் இரு அணிகளும் சமநிலையில் உள்ளன. இப்போட்டியில் வெற்றி பெறும் அணியே கோப்பையை வெல்லும் என்பதால், இரு அணிகளும் வெற்றி பெற முனைப்பு காட்டி வருகின்றன.
இந்த நிலையில் இப்போட்டியில் இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவுக்கு பதிலாக தமிழக இடதுகை வேகப்பந்து வீச்சாளர் நடராஜன் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். டாஸ் போட்டு முடித்ததும் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி இதை தெரிவித்தார். இதனை வரவேற்கும் விதமாக ‘Nattu’ என சமூக வலைதளங்களில் ரசிகர்கள் டிரெண்ட் செய்து வருகின்றனர்.
Happy for #natrajan comes in team for 3rd odi#TeamIndia #INDvENG #INDvsENG_2021 #nattu #WeLoveKalyanBabu #HappyHoli pic.twitter.com/4wgQKqLPDl
— Deepak roy (@speakDeepakroy) March 28, 2021
Finally #Nattu ! 💥👊
— Mr.Nadippin_Nayagan💥 (@Thilaga_Lover3) March 28, 2021

மற்ற செய்திகள்
