'பாண்டியாவுக்கு ஏன் பவுலிங் கொடுக்கல'?.. கோலியை கேள்விகளால் துளைத்தெடுத்த விமர்சகர்கள்!.. கடைசியா சீக்ரெட் ப்ளானை உடைச்சுட்டாரு!.. இப்ப சந்தோசமா?
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஹர்திக் பாண்டியாவுக்கு பந்து வீச வாய்ப்பளிக்காதது குறித்து கேப்டன் கோலியிடம் பல்வேறு தரப்பினரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். அதற்கு கோலி விரிவான விளக்கத்தை அளித்துள்ளார்.
இந்தியா-இங்கிலாந்து இடையேயான 2வது ஒரு நாள் போட்டியில், இங்கிலாந்து வீரர்களின் அதிரடியான பேட்டிங் காரணமாக இந்திய அணி தோல்வியை தழுவியது. மேலும், இந்த தொடரும் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது.
இந்நிலையில் இந்த இங்கிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரில் பந்துவீசிய ஹார்டிக் பாண்டியா ஒருநாள் தொடரில் இதுவரை இரண்டு போட்டிகளிலும் பந்து வீசாதது கடும் விமர்சனங்களை சந்தித்து வருகிறது.
இரண்டாவது போட்டியில் இந்திய அணியின் பந்துவீச்சாளர்கள் தடுமாறிய போது, ஆறாவது பவுலரான ஹர்திக் பாண்டியாவை ஏன் உபயோகிக்கவில்லை என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
அந்த விமர்சனங்களுக்கு பதிலளித்த கோலி, பாண்டியாவின் வேலைப்பளுவை நாம் சரியாக புரிந்து கொள்ள வேண்டும். இந்த டி20 தொடரில் பந்து வீசிய அவரை ஒரு நாள் போட்டிகளில் பணிச்சுமை காரணமாக பந்துவீச வைக்கவில்லை.
மேலும், அடுத்து நாம் இங்கிலாந்து சென்று டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் விளையாட இருக்கிறோம். அதற்காக அவர் முழு உடல் தகுதியுடன் இருப்பது அவசியம்.
அதன் காரணமாகவே அவரை நான் ஒருநாள் போட்டிகளில் பந்துவீச வைக்கவில்லை. அதுமட்டுமின்றி, அடுத்து வரும் டி20 உலக கோப்பை தொடருக்கும் அவரது பந்துவீச்சு அணிக்கு அவசியம் என்பதாலேயே இந்த ஒருநாள் தொடரில் அவரை அதிகம் அலட்டிக்கொள்ளாமல் முழு உடற்தகுதியுடன் வைத்திருக்கவே அவரை பந்துவீச வைக்கவில்லை என கோலி தெளிவான விளக்கத்தை கொடுத்துள்ளார்.