‘கோலி வந்ததும் அந்த சிஸ்டத்தையே மாத்திட்டார்’!.. ‘அதுக்கு முன்னாடி யாருமே அதப்பத்தி பேசினதே கிடையாது’.. சீக்ரெட் உடைத்த இஷாந்த்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்திய அணியின் ஃபிட்னெஸ் சிஸ்டத்தையே மாற்றியவர் விராட் கோலி தான் என்று வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் ஷர்மா பாராட்டியுள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளரான இஷாந்த் ஷர்மா ESPNCricinfo சேனலுக்கு பேட்டி ஒன்று அளித்துள்ளார். அதில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி குறித்து பெருமையாக இஷாந்த் ஷர்மா கூறியுள்ளார். அதில், ‘இந்திய அணியின் ஃபிட்னெஸ் சிஸ்டத்தை ஒட்டுமொத்தமாக மாற்றியவர் கேப்டன் கோலிதான். அதற்கு முன்னர் அணிக்குள் வீரர்களின் உடலில் உள்ள கொழுப்பு சதவிகிதம் குறித்து யாருமே பேசியது கிடையாது. ஆனால் முதலில் அந்த சோதனையை தனக்குதானே செய்து கொண்டு, அணியின் சக வீரர்களையும் செய்ய வைத்தவர் கோலி’ என இஷாந்த் ஷர்மா தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர், ‘இதற்கு பின்னர், இந்திய அணி வீரர்களின் ஃபிட்னெஸ் தரம் முற்றிலுமாக மாறியது. நன்றாக சாப்பிட்டால், களத்தில் திடமுடன் விளையாட முடியும். உடற்தகுதியை பராமரித்தால் எனர்ஜியுடன் இருக்கலாம். அணியின் கேப்டனே இந்த ஃபிட்னெஸ் விஷயத்தில் முன்னின்று வழிநடத்துவதுதான், இன்று இந்தியாவை சர்வதேச கிரிக்கெட் அணிகள் உடற்தகுதி விஷயத்தில் உன்னிப்பாக கவனிக்க காரணம்’ என இஷாந்த் ஷர்மா கூறியுள்ளார்.
கடந்த 2007-ம் ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமான இஷாந்த் ஷர்மா, இந்திய அணிக்காக 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய இரண்டாவது வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். சமீபத்தில் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடியதன் மூலம் இந்த சாதனையை இஷாந்த் ஷர்மா படைத்தார். முன்னதாக இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் கபில் தேவ், இந்த சாதனையை படைத்த முதல் வீரர் என்பது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்
