'ஏங்க... ஏன் இப்படி?.. இப்ப தான நல்லா போயிட்டிருக்கு'!.. 'கோலி கேப்டன்சிய ரோகித் கிட்ட கொடுக்கணுமா'?... மீண்டும் கிளம்பிய சர்ச்சை!.. செம்ம பதிலடி!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுவிராட் கோலியை கேப்டன்ஷிப் பொறுப்பிலிருந்து மாற்ற வேண்டிய அவசியம் இல்லை, அதற்கு தேவையும் இல்லை என முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வாளர் சரந்தீப் சிங் கூறியுள்ளார். கோலிக்கு மாற்றாக ரோகித் ஷர்மா இந்தியாவை வழிநடத்த வேண்டுமென்ற விவாதம் எழுந்த நிலையில் இதனை அவர் தெரிவித்துள்ளார்.
கோலி தலைமையில் இந்திய அணி இதுவரை எந்தவொரு ஐசிசி கோப்பையும் வென்றதில்லை. அதே நேரத்தில் டி20 போட்டிகளில் கோலியை காட்டிலும் ரோகித் ஷர்மாவின் வெற்றி விகிதம் 13.83 சதவிகிதம் அதிகம். அதனால் டி20 கிரிக்கெட் போட்டிகளுக்காவது கேப்டனை மாற்ற வேண்டும் என சொல்லப்படுகிறது.
ஒரு அணியின் கேப்டன் சரிவர அவரது ஆட்டதில் விளையாடவில்லை என்றால் கேப்டனை மாற்ற வேண்டிய அவசியம் இருக்கும். ஆனால், கோலி அனைத்து ஃபார்மெட்டிலும் 50 ரன்களுக்கு மேல் சராசரி வைத்திருப்பவர்.
அவர் ஐபிஎல் கோப்பையை வெல்லாத காரணத்தினால் அவரது கேப்டன்சி குறித்த விவாதம் எழுத்துள்ளது.
"அதற்காக எல்லாம் அவரை அந்த பொறுப்பில் இருந்து மாற்ற வேண்டிய அவசியமில்லை. அவர் அணியில் இல்லாத நேரத்தில் ரோகித் அணியை வழிநடத்துவார். கோலி ஃபிட்டான வீரரும் கூட" என அவர் தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரின் போது இந்தியா இரண்டாவது இன்னிங்ஸில் பந்து வீசிய போது இரண்டு போட்டிகளில் கோலி, ரோகித் இடம் கேப்டன்சி பொறுப்பை ஒப்படைத்து சென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.