இது எப்படிங்க? ஆஸ்திரேலியா உள்ளூர் அணிக்காக விளையாடப்போகும் இந்திய கிரிக்கெட் அணியின் இளம் முன்னாள் கேப்டன்
முகப்பு > செய்திகள் > விளையாட்டுமெல்போர்ன்: இந்திய இளையோர் அணியின் முன்னாள் கேப்டன் உன்முக்த் சந்த் ஆஸ்திரேலிய உள்ளூர் அணிக்காக விளையாட உள்ளார்.
2012 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடந்த Under-19 உலகக் கோப்பைப் போட்டியில் இந்திய அணி கேப்டனாக செயல்பட்டவர் உன்முக்த் சந்த், இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சேசிங்கில் சதமடித்து இந்திய அணி உலக கோப்பை ஜெயிக்க உதவியவர். இவர் விராத் கோலி போல இந்திய அணிக்கு விளையாடுவார், மிகப்பெரிய அளவில் சாதனை படைப்பார் என கருதப்பட்டது. 18 வயதில் ஐபிஎல் போட்டியில் அறிமுகமானார். டெல்லி டேர்டெவில்ஸ், மும்பை இந்தியன்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளில் இடம்பெற்றாலும் சோபிக்க தவறினார். இதன் காரணமாக ஐபிஎல்லில் ஓரங்கட்டப்பட்டார்.
பின் இந்தியா A அணியில் இடம்பெற்ற உன்முக்த் சந்த், சில போட்டிகளில் அணியின் கேப்டனாகவும் செயல்பட்டார். பின் சரியாக விளையாடாததால் 2017-ல் தில்லி ரஞ்சி கோப்பை அணியிலிருந்து நீக்கப்பட்டார். பள்ளி மாணவராக இருந்தபோதே டெல்லி அணிக்காக ரஞ்சிக் கோப்பையில் விளையாடியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
RCB அணிக்கு அடுத்த கேப்டன் இவரா..? லிஸ்ட்லயே இல்லாத பெயரா இருக்கே..! கசிந்த தகவல்..!
பிறகு உத்தரகண்ட் அணியில் இணைந்து சில காலம் விளையாடினார். எனினும் எதிர்பார்த்த அளவுக்கு சோபிக்காததால் உள்ளூர் அணியிலேயே சவால்களை எதிர்கொள்ள முடியாமல் போனது. இவருடன் U19 இந்திய அணியில் விளையாடிய சந்தீப் ஷர்மா ஐபிஎல்லிலும், ஹனுமா விஹாரி இந்திய டெஸ்ட் அணியிலும் விளையாடி வருவது குறிப்பிடத்தக்கது.
சென்ற ஆண்டு உன்முக்த் சந்த் தன்னுடைய 28 வயதில் இந்திய கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றார். பிசிசிஐ-ல் தனக்கு போதுமான வாய்ப்பு கிடைக்காததால் உலகம் முழுதும் உள்ள 20 ஓவர் போட்டிகளில் பங்கேற்க்க உள்ளதாகவும், பின் அமெரிக்காவுக்காக விளையாடவுள்ளதாகவும் உன்முக்த் சந்த் அறிவித்தார். நம்ம ஊர் டிவிசன் போட்டிகள் போல அமெரிக்காவில் உள்ளூர் மைனர் லீக் போட்டிகள் நடக்கும். இந்த மைனர் லீக் போட்டிகளில் விளையாடியுள்ள உன்முக்த் சந்த், வரும் 2023-ல் தொடங்கும் மேஜர் லீக் போட்டிகளிலும் விளையாட உள்ளார். ஸ்மித் பட்டேல், ஹர்மீத் சிங் ஆகியோர் ஏற்கனவே அமெரிக்க அணிக்காக விளையாடசென்றது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் நடப்பு சீசன் பிக் பாஷ் லீக் டி20 போட்டியில் மெல்போர்ன் ரெனிகேட்ஸ் அணிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள உன்முக்த் சந்த், இன்று நடைபெறும் ஹோபர்ட் ஹரிக்கேன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் அறிமுகமாகியுள்ளார். இதன் மூலம் பிபிஎல் போட்டியில் விளையாடிய முதல் இந்திய ஆண் வீரர் என்ற பெருமையை உன்முக்த் சந்த் பெற்றுள்ளார். 67 முதல் தரப் போட்டிகளில் விளையாடி உள்ள உன்முக் சந்த் 3,379 ரன்கள் குவித்துள்ளார். முதல் தரக் கிரி்க்கெட்டில் 120 ஒருநாள் போட்டிகளில் 4,505 ரன்களும், 77 டி20 போட்டிகளில் 1,565 ரன்களும் எடுத்துள்ளார்.