அன்னைக்கு கப்பல்ல 'என்ன' நடந்துச்சுன்னா... 'உண்மையை ஒப்புக்கொண்ட கேப்டன்...' 'அதிரடி' நடவடிக்கை எடுத்த நீதிமன்றம்...!
முகப்பு > செய்திகள் > உலகம்எண்ணெய் கப்பல் விபத்து விவகாரத்தில் கப்பலின் கேப்டன் வேலை நேரத்தில் ஜாலிக்காக மது அருந்தியதாக தன் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார்.

கடந்த 2020ஆம் ஆண்டு ஜூலை மாதம் மொரிசியஸ் கடலில், ஜப்பான் நாட்டைச் சேர்ந்த எம்.வி.வாகாஷியோ என்ற எண்ணெய்க் கப்பல் விபத்துக்குள்ளானது. இந்த கப்பலில் இருந்த ஆயிரம் டன் எண்ணெய் கொஞ்சம் கொஞ்சமாக வெளியேறி கடலில் கலந்துள்ளது.
இதன்காரணமாக அந்த பகுதி முழுவதும் கருப்பு நிறத்தில் படர்ந்து காணப்பட்டது. சுத்தபடுத்த முடியாதபடி பல கிலோமீட்டர் தொலைவிற்கு எண்ணெய் படர்ந்து சென்றது. இதனால் நீர் அசுத்தமானது. நீர் மட்டும் அல்லாமல் காற்றும் மாசடைந்தது. உப்பு நீருடன் எண்ணெய் கலந்தது அங்கிருந்த கடல்வாழ் உயிரினங்களுக்கு எமனாக மாறியது.
இதன் காரணமாக கடலின் சுற்றுச்சூழல் கடுமையாக மாசடைந்து ஏராளமான மீன்கள் உள்ளிட்ட கடல்வாழ் உயிரினங்கள் உயிரிழந்தன. இந்த விபத்து தொடர்பாக எண்ணெய் கப்பலின் கேப்டன் சுனில் குமார் நந்தேஸ்வர், இரண்டாம் நிலை அதிகாரி (துணை கேப்டன்) ஜனேந்திர திலகரத்ன ஆகியோர் மீது மொரிசியஸ் தீவின் போர்ட் லூயிஸ் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
பல மாதங்கள் நடத்தப்பட்ட இந்த விசாரணையின் முடிவில், கப்பலில் நடந்த விருந்து நிகழ்ச்சியின்போது தான் மது அருந்தியதாக கேப்டன் சுனில் குமார் ஒப்புக்கொண்டுள்ளர். அதோடு, தான் செய்த இந்த தவறுக்காக மன்னிப்பும் கேட்டுள்ளார். மேலும் கப்பலின் துணை கேப்டனும் தவறை ஒப்புக்கொண்டார்.
வழக்கு விசாரணை கடந்த வாரம் முடிவடைந்த நிலையில், கேப்டன் மற்றும் துணை கேப்டன் இருவரும் குற்றவாளிகள் என கடந்த வாரம் நீதிமன்றம் அறிவித்தது. மேலும், அவர்களுக்கான தண்டனை விவரம் இன்று அறிவிக்கப்பட்டது.
அதில் குற்றவாளிகளான கேப்டன் சுனில் குமார் நந்தேஸ்வர், துணை கேப்டன் ஜனேந்திர திலகரத்ன ஆகியோருக்கு தலா 20 மாதங்கள் சிறைத்தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார். எண்ணெய் கப்பலின் முழு விபத்திற்கும், கடல் வாழ் உயிரினங்கள் உயிரிழந்ததிற்கும் கேப்டனும், துணை கேப்டனும் பொறுப்பற்ற முறையில் நடந்துக் கொண்டதே காரணம் என நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.

மற்ற செய்திகள்
