என்னோட சாய்ஸ் கண்டிப்பா 'அவரு' தான்...! 'அடுத்த கேப்டன்' ஆகுறதுக்கு முழு தகுதி 'அவருக்கு' இருக்கு...! - வெளிப்படையாக தெரிவித்த சேவாக்...!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளரான ரவி சாஸ்திரியின் பதவிக்காலம் நடப்பு டி-20 உலகக்கோப்பை தொடருடன் முடிகிறது.
எனவே இந்திய அணியின் அடுத்த பயிற்சியாளரை தேர்வு செய்யும் பணியில் கடந்த இரு மாதங்களாக பிசிசிஐ ஈடுபட்டிருந்தது. மேலும், பயிற்சியாளராக விரும்புவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவித்திருந்தது. எனவே, இந்திய அணியின் பயிற்சியாளர் பதவிக்கு ராகுல் டிராவிட் உள்பட பல முன்னாள் வீரர்கள், பயிற்சியாளர்கள் விண்ணப்பம் அளித்திருந்தனர்.
இந்நிலையில், புதிய பயிற்சியாளராக ராகுல் டிராவிட் நியமிக்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக தற்போது அறிவித்துள்ளது. மேலும் டி-20 தொடரிலிருந்து இந்த 2021 உலக கோப்பை தொடருக்குப் பிறகு கேப்டனாக பயணிக்க மாட்டேன் என்று விராட் கோலி தெரிவித்திருந்தார். எனவே பிசிசிஐ எப்போது வேண்டுமானாலும் டி20 தொடரில் இந்திய அணியின் கேப்டனை தேர்வு செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் அடுத்த கேப்டன் யார் என்பது அனைவருடைய கேள்வியாகவும் உள்ளது. இந்த நிலையில் முன்னாள் வீரர் வீரேந்தர் சேவாக் பத்திரிக்கையாளர்களின் சந்திப்பின் பொழுது டி-20 தொடரின் அடுத்த கேப்டனாக ரோகித் சர்மாவை தான் நியமிக்க வேண்டும் என்று தனது விருப்பத்தை வெளிப்படையாக கூறியுள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், இந்திய அணியின் அடுத்த டி-20 தொடர் கேப்டனாக செயல்படுவதற்கான அனைத்து திறமையும் தகுதியும் இந்திய அணியின் அனுபவமிக்க வீரர் ரோஹித் சர்மாவுக்கு தான் இருக்கிறது.
ரோஹித்சர்மா ஐபிஎல் தொடரில் மிகவும் சிறப்பாக ஒருங்கிணைத்து மும்பை இந்தியன்ஸ் அணிக்கு 5 முறை கோப்பையை வெற்றி பெற்றுக் கொடுத்துள்ளார். எனவே இந்திய அணியின் அடுத்த கேப்டனாக ரோகித் சர்மாவை தான் நியமனம் செய்ய வேண்டும் என சேவாக் கூறியுள்ளார்.