நான் மட்டும் 'ஆர்சிபி' டீமோட 'ஓனரா' இருந்துருந்தேன்னா... 'நேரா கோலி கிட்ட போய்...' பெர்சனலா 'அந்த விசயத்தை' பத்தி பேசியிருப்பேன்...! - ஆதங்கத்தை கொட்டி தீர்த்த லாரா...!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்த வருட ஐபிஎல் சீசனுடன் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகுவதாக அறிவித்திருந்தார் ஆர்சிபி அணியின் கேப்டன் விராட் கோலி.
எலிமினேட்டர் ஆட்டத்தில் கொல்கத்தா அணிக்கு எதிராக ஆர்சிபி தோல்வி அடைந்த காரணத்தினால் தொடரை விட்டு வெளியேறி உள்ளது. இனி அடுத்த சீசன் முதல் இன்னொரு கேப்டனின் தலைமையில் கோலி, ஒரு வீரராக பெங்களூர் அணியில் விளையாட இருக்கிறார்.
இந்நிலையில், வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் கேப்டன் பிரைன் லாரா, விராட் கோலியின் முடிவு குறித்து தனது கருத்தை கூறியுள்ளார்.
“நான் மட்டும் ஆர்சிபி அணியின் உரிமையாளராக இருந்திருந்தால் கோலியிடம் தனிப்பட்ட முறையில் சென்று கேப்டன் பொறுப்பை தொடருமாறு சொல்லியிருப்பேன். ஏன் அப்படி சொல்வேன் என்றால், அவரை ஒரு வீரராகவும், ஒரு அணியின் தலைவராகவும் இரு வேறு நபராக நான் பார்க்கிறேன்.
மிகவும் திறமை வாய்ந்த, வயதில் இளையவரான அவர் எப்படியும் இன்னும் சில வருடங்கள் கிரிக்கெட் விளையாடுவார். இத்தகைய சூழலில் அவர் வேறொரு வீரரின் தலைமையின் கீழ் ஆடுவதை பார்க்க என் மனம் விரும்பவில்லை.
விராட் கோலி கேப்டனாக இல்லாத ஆர்சிபி அணி எப்படி ஆகப் போகிறது என்பது குறித்து தெரியவில்லை. எனவே தான் சொல்கிறேன் நான் உரிமையாளராக இருந்தால் மீண்டும் ஒரு முறை புதிதாக வித்தியாசமான ஒரு அணியை உங்களது தலைமையில் அமைத்து, விளையாடுவோம் என சொல்வேன்” இவ்வாறு பிரைன் லாரா கூறியுள்ளார்.