ரோகித்தை ODI கேப்டனாக்க ‘இவங்க’ எடுத்த முடிவு தான் காரணமா..? கசிந்த தகவல்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுரோகித் சர்மாவுக்கு கேப்டன் பொறுப்பை கொடுக்க வேண்டும் என யார் முடிவெடுத்தது என்பது குறித்து தகவல் வெளியாகி உள்ளது.
ஐக்கிய அரபு அமீரகத்தில் இந்த ஆண்டு நடந்து முடிந்த டி20 உலகக்கோப்பை தொடருடன், இந்திய அணிக்கான கேப்டன் பதவியில் இருந்து விராட் கோலி விலகினார். இதனை அடுத்து தொடக்க ஆட்டக்காரர் ரோகித் சர்மா புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டார்.
இந்த சமயத்தில் நியூசிலாந்து அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடியது. இப்போட்டியில் இருந்து ரோகித் சர்மா கேப்டனாக பெற்றுக்கொண்டார். இந்த தொடரை 3-0 என்ற கணக்கில் வென்று இந்தியா கோப்பையை கைப்பற்றியது.
இதனை அடுத்து வரும் டிசம்பர் 26-ம் தேதியும் தென் ஆப்பிரிக்காவுக்கு இந்திய அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் மற்றும் 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இந்த தொடரில் உள்ள வீரர்கள் பட்டியலை சமீபத்தில் பிசிசிஐ அறிவித்தது.
இந்த சூழலில் திடீரென இந்திய ஒருநாள் அணிக்கான கேப்டன் பொறுப்பிலிருந்து விராட் கோலி நீக்கப்பட்டு ரோகித் சர்மா புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டார். பிசிசிஐயின் இந்த திடீர் அறிவிப்பு ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. விராட் கோலியை கேப்டன் பதவியில் இருந்து நீக்கியது குறித்து பலரும் விமர்சனம் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் ரோகித் சர்மாவை கேப்டனாக நிமித்ததற்கான காரணம் வெளியாகியுள்ளது. அதில், ‘பிசிசிஐ நிர்வாகம் ஒயிட் பால் கிரிக்கெட்டுக்கு ஒரே தலைமை இருக்க வேண்டும் என நினைத்து. டி20 அணிக்கு ஒரு கேப்டனும், ஒருநாள் அணிக்கு மற்றொரு கேப்டனும் இருப்பது தேவையில்லாத குழப்பத்தை ஏற்படுத்தும். அதனால் ஒயிட் பால் அணிக்கு ஒரே கேப்டனாக இருக்க வேண்டும் என்று தேர்வாளர்கள் விரும்பினர்’ இந்தியன் எக்ஸ்பிரஸ் சேனலுக்கு பிசிசிஐ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதே கருத்தைதான் பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலியும் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.