‘நான் எப்பிடி இருக்கேன்னு கேட்ககூடாதா..?’ கோபித்துக்கொண்ட ஹர்பஜன் சிங்கின் வைரல் ட்வீட்..

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Saranya | Jun 20, 2019 04:04 PM

இந்திய அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளராக திகழ்ந்த ஹர்பஜன் சிங் கடந்த இரண்டு சீசனாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார்.

harbhajan Singhs new tweet in tamil goes viral

ஐபிஎல் தொடரின்போது சிஎஸ்கே ரசிகர்களைக் கவர்வதற்காக ஹர்பஜன் அடிக்கடி தமிழில் ட்வீட் செய்து அசத்துவது வழக்கம். அவரது ட்வீட்டுக்கு ரசிகர்களும் ஆர்வமுடன் பதிலளிப்பார்கள். லைக், ஷேர் செய்து ரசிகர்கள் அளிக்கும் வரவேற்பால் அவரும் தமிழில் ட்வீட் செய்வதைத் தொடர்ந்து வந்தார். ஐபிஎல் முடிவடைந்து உலகக் கோப்பை போட்டிகள் தொடங்கியதிலிருந்து  ஹர்பஜன் தமிழில் அதிகமாக ட்வீட் எதுவும் செய்யாமல் இருந்தார்.

இந்நிலையில் இன்று அவர் செய்துள்ள தமிழ் ட்வீட் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. அதில், “எல்லாருக்கும் வணக்கம்!! என்னோட தமிழ் சொந்தங்கள் எல்லாம் எப்பிடி இருக்கீங்க ஏன் நீங்க எல்லாம் நான் தமிழ் ட்வீட் போடும் போது ஆசையா பேசுறீங்க. மத்த நேரத்துல ஒரு ஹாய், ஹலோ கூட இல்ல. நான் எப்பிடி இருக்கேன்னு கேட்ககூடாதா சும்மா வெளயாடுனேன் எல்லாம் நல்லா இருக்கீங்களா. தமிழ் மக்களால் நான்” எனப் பதிவிட்டுள்ளார்.

இந்தப் பதிவிற்கு ரசிகர்களும், “அது அப்படி இல்லை. உங்களை மறக்க முடியுமா?” என ஒவ்வொருவரும் ஒரு காரணத்துடன் பதிலளித்து வருகின்றனர். இதற்கு முன்னதாக ஹர்பஜன் நேசமணி குணமடைய வேண்டி நகைச்சுவையான ட்வீட் ஒன்றை பதிவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

 

 

 

Tags : #HARBHAJANSINGH