தன்னை பாராட்டி கோலி போட்ட போஸ்ட்.. பாத்துட்டு சூரிய குமார் யாதவ் கொடுத்த ரியாக்ஷன்.. வைரலாகும் வீடியோ..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Madhavan P | Jan 09, 2023 12:28 PM

சூரிய குமார் யாதவின் அதிரடி சதத்தை பாராட்டி விராட் கோலி போஸ்ட் ஒன்றை எழுதியிருக்கிறார். இதனை மகிழ்ச்சியுடன் சூரிய குமார் யாதவ் பார்க்கும் வீடியோ ஒன்று வெளியாகி தற்போது வைரலாக பரவி வருகிறது.

Suryakumar Reply To Virat Kohli After T20I Century Against Sri Lanka

Also Read | "விராட் மாதிரி ஒரு பேட்ஸ்மேன்..".. உலகக்கோப்பை T20ல கோலி அடிச்ச சிக்ஸ்.. பல நாள் கழிச்சு மனம் திறந்த பாகிஸ்தான் பவுலர் ஹாரிஸ்..!

இந்தியாவில் இலங்கை கிரிக்கெட் அணி சுற்றுப் பயணம் மேற்கொண்டு வருகிறது. T20 தொடர் நடைபெற்று வந்த நிலையில் இதனை இந்தியா வென்றிருக்கிறது. முதல் போட்டியில் இந்தியாவும் இரண்டாவது போட்டியில் இலங்கையும் வெற்றிபெற்ற நிலையில் தொடர் யாருக்கு என தீர்மானிக்கும் இறுதி மற்றும் கடைசி போட்டி ராஜ்கோட்டில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா பேட்டிங்கை தேர்வு செய்தார். இந்திய அணியில் ஷுப்மன் கில் மற்றும் ராகுல் திரிபாதி சிறப்பாக விளையாடிய நிலையில் அடுத்து வந்த சூரிய குமார் யாதவ் அதிரடி காட்டினார்.

அவருக்கு வீசப்பட்ட பந்துகள் பவுண்டரிகளுக்கு பறந்தன. 51 பந்துகளை சந்தித்த சூரிய குமார் யாதவ் 112 ரன்களை விளாசினார். இதில் 7 பவுண்டரி மற்றும் 9 சிக்ஸர்கள் அடக்கம். இதன் பலனாக இந்திய அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்களை இழந்து 228 ரன்களை குவித்தது.

இதனையடுத்து 229 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணி 16.4 ஓவரில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 137 ரன்களை மட்டுமே எடுத்தது. இதனால் இந்திய அணி 91 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்று கோப்பையையும் கைப்பற்றியது. இப்போட்டியில் ஆட்ட நாயகனாக சூரிய குமார் யாதவ் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இந்நிலையில் சூரிய குமார் யாதவின் அதிரடியை பாராட்டி இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் கோலி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்டோரி ஒன்றை பகிர்ந்திருந்தார். சூர்யா பேட்டுடன் நிற்கும் புகைப்படத்தை பகிர்ந்த கோலி தீப்பறக்கும் எமோஜிக்களையும் பயன்படுத்தியிருந்தார்.

போட்டி முடிவடைந்த பிறகு சூரிய குமார் யாதவ் கோலியின் இந்த ஸ்டோரியை பார்க்கும் வீடியோவை இந்திய கிரிக்கெட் வாரியம் பகிர்ந்திருக்கிறது. தனது போனில் கோலியின் ஸ்டோரியை பார்த்து புன்னகைக்கும் சூரிய குமார் யாதவ் "ப்ரதர், லாட்ஸ் ஆஃப் லவ். சீக்கிரமே சந்திப்போம்" என்கிறார்.

 

Also Read | வழுக்கை தலை உடையவர்களுக்கு மாதம் 6000 ரூபாய் ஓய்வூதியம்.. முதல்வருக்கு சென்ற கோரிக்கை..!

Tags : #CRICKET #SURYAKUMAR #VIRAT KOHLI #T20I #SRI LANKA

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Suryakumar Reply To Virat Kohli After T20I Century Against Sri Lanka | Sports News.