வழுக்கை தலை உடையவர்களுக்கு மாதம் 6000 ரூபாய் ஓய்வூதியம்.. முதல்வருக்கு சென்ற கோரிக்கை..!
முகப்பு > செய்திகள் > இந்தியாதெலுங்கானா மாநிலத்தில் வழுக்கை தலை உடையவர்கள் தங்களுக்கு மாதம் ரூபாய் 6 ஆயிரம் ஓய்வூதியம் அளிக்க வேண்டும் என முதல்வருக்கு கோரிக்கை வைத்திருக்கின்றனர்.

Also Read | மண்ணுக்குள் புதையும் இந்திய நகரம்.. பிரதமர் அலுலகத்தில் நடந்த அவசர ஆலோசனை.. திகிலூட்டும் பின்னணி..!
தெலுங்கானா மாநிலத்தில் வழுக்கை தலை உடையவர்கள் ஒன்று சேர்ந்து தங்களுக்கு என சங்கம் ஒன்றை அமைத்திருக்கின்றனர். இந்த சங்கத்தில் தலைவர் பதவிக்கு தேர்தல் நடத்தப்பட்டு அதில் பாலையா என்பவர் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். இந்நிலையில் தலைவர் பதவியை ஏற்ற பாலையா தங்களது அமைப்புகளுக்கான கோரிக்கையை அடங்கிய அறிக்கை ஒன்றை மாநில முதலமைச்சர் சந்திரசேகர ராவுக்கு அனுப்பி உள்ளார்.
அந்த அறிக்கையில்,"சமூகத்தில் வழுக்கை தலையுடன் இருப்பவர்கள், கிண்டல் செய்யப்படுகிறார்கள். பல பிரச்னைகளையும், அவமானத்தையும் எதிர்கொள்கிறார்கள். அதிலும் சிறு வயதிலேயே பலருக்கும் வழுக்கை ஏற்பட்டு விடுகிறது. இதனால் அவர்கள் சிரமங்களை எதிர்கொள்கிறார்கள். இம்மாதிரி வழுக்கை தலை உடையவர்கள் நான்கு பேருடன் சேர்ந்து வெளியே செல்ல தயங்குகிறார்கள். வழுக்கை தலையுடன் இருப்பவர்களுக்கு திருமணம் நடப்பதும் கஷ்டமாக இருக்கிறது. வழுக்கை தலை இருப்பவர்கள் தாழ்வு மனப்பான்மை ஏற்பட்டு மன உளைச்சலுக்கு ஆளாகி விடுகிறார்கள்” என குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இதுகுறித்து பாலையா வெளியிட்டுள்ள அறிக்கையில் "மாற்றுத் திறனாளிகள், கைவிடப்பட்டவர்கள், தீராத வியாதியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு எல்லாம் ஓய்வூதியம் வழங்குகிறீர்கள். அதுபோல் வழுக்கை தலை உடையவர்களுக்கும் மாதம் ரூ.6 ஆயிரம் ஓய்வூதியம் வழங்க வேண்டும். பொங்கல் பண்டிகைக்குள் ஓய்வூதியம் கொடுக்காவிட்டால் பெரிய அளவில் போராட்டம் நடத்துவோம். தலைமைச் செயலகத்தை முற்றுகையிடுவோம்' என்று கூறியுள்ளார்.
இது அம்மாநிலத்தில் பெரும் வைரலாக பேசப்பட்டு வருகிறது. அதேவேளையில், வழுக்கை தலை உடையவர்களை கிண்டல் செய்வது, அவர்களை மன ரீதியில் பாதிக்கும் எனவும், உருவ கேலிக்கு மக்கள் ஒருபோதும் இடம் கொடுக்க கூடாது எனவும் சமூக ஆர்வலர்கள் சோசியல் மீடியாவில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

மற்ற செய்திகள்
