Naane Varuven D Logo Top

"பாத்துட்டோம், VINTAGE ரெய்னா'வ பாத்துட்டோம்".. ஒரே ஒரு கேட்ச்.. "கிரிக்கெட் ரசிகர்கள் மொத்தமா ஆடி போய்ட்டாங்க!!"

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Ajith Kumar V | Sep 29, 2022 03:05 PM

சுரேஷ் ரெய்னா எடுத்த கேட்ச் தொடர்பான வீடியோ ஒன்று, தற்போது இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது.

Suresh raina catch in road safety series stunned fans

Also Read | "கழுத்துல போர்டு, கையில் தட்டு".. ரூ.80,000 வருமானமா..?".. யாசகம் செய்யும் இளைஞர்கள்.. பாராட்ட வைக்கும் பின்னணி!!

ஓய்வு பெற்ற கிரிக்கெட் வீரர்களை வைத்து இந்தியாவில் தற்போது சாலை பாதுகாப்பு கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில், இந்தியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இலங்கை, வெஸ்ட் இண்டீஸ், தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, வங்கதேசம் உள்ளிட்ட எட்டு நாடுகளை சேர்ந்த முன்னாள் சர்வதேச கிரிக்கெட் வீரர்கள் இதில் பங்கேற்றனர்.

சச்சின் டெண்டுல்கர் தலைமையிலான இந்தியா லெஜண்ட்ஸ் அணி, தற்போது அரை இறுதி சுற்றுக்கு முன்னேற்றம் கண்டுள்ளது. தென் ஆப்பிரிக்கா மற்றும் இங்கிலாந்து ஆகிய அணிகளை லீக் சுற்றில் இந்திய அணி வென்றிருந்தது. மற்ற 3 லீக் போட்டிகள், மழை காரணமாக முடிவு தெரியாமலே கைவிடப்பட்டது.

Suresh raina catch in road safety series stunned fans

இந்தியா லெஜண்ட்ஸ் அணியை தவிர, இலங்கை லெஜண்ட்ஸ், ஆஸ்திரேலியா லெஜண்ட்ஸ் மற்றும் வெஸ்ட் இண்டீஸ் லெஜண்ட்ஸ் ஆகிய அணிகளும் அரை இறுதி சுற்றுக்கு முன்னேற்றம் கண்டுள்ளது. இதன் முதல் அரை இறுதி போட்டியில், இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய அணிகள் மோதி இருந்தது.

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி, 17 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 136 ரன்கள் எடுத்திருந்தது. மழை காரணமாக போட்டி நிறுத்தப்பட்ட நிலையில், அரை இறுதி போட்டி என்பதால் இன்று அதே இடத்தில் இருந்து மீண்டும் ஆரம்பமாகி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Suresh raina catch in road safety series stunned fans

இந்நிலையில், இந்த போட்டியின் போது சுரேஷ் ரெய்னா எடுத்த கேட்ச் தொடர்பான வீடியோ ஒன்றை கிரிக்கெட் ரசிகர்கள் அதிகம் கொண்டாடி வருகின்றனர். இந்திய அணிக்காக ஆடிய போதும், ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணிக்காக ரெய்னா ஆடிய போதும், அற்புதமான ஃபீல்டராக வலம் வந்துள்ளார். சமீபத்தில், ஐபிஎல் உள்ளிட்ட அனைத்து வடிவிலான கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு அறிவிப்பை ரெய்னா வெளியிட்டிருந்ததால், ரசிகர்கள் ஓரளவுக்கு ஏமாற்றம் அடைந்திருந்தனர்.

Suresh raina catch in road safety series stunned fans

தொடர்ந்து, சாலை பாதுகாப்பு கிரிக்கெட் தொடரில் ரெய்னா களமிறங்கியதால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்த நிலையில், நீண்ட நாட்களுக்கு பிறகு, Vintage ரெய்னாவை இந்த கேட்ச் மூலம் ரசிகர்கள் திரும்ப பார்த்துள்ளனர். மிதுன் வீசிய பந்தை ஆஸ்திரேலிய வீரர் பென் டங் வேகமாக அடிக்க, அதனை டைவ் அடித்து மிக அசாத்தியமாக கேட்சாக மாற்றினார் ரெய்னா.

இந்த வீடியோ, கிரிக்கெட் ரசிகர்கள் கவனத்தை பெற்றுள்ள நிலையில், பலரும் ரெய்னாவை பாராட்டி கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

Also Read | "உலகமே இத படிக்க வேண்டிய நேரம் வந்துடுச்சு".. ராணிக்கு கடைசியா எழுதுன கடிதம்.. அரச குடும்பத்தில் குழப்பத்த கிளப்பிய நபர்!!

Tags : #CRICKET #SURESH RAINA #IND-L VS AUS-L #ROAD SAFETY WORLD SERIES #INDIA LEGENDS VS AUSTRALIA LEGENDS #ROAD SAFETY SERIES 2022

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Suresh raina catch in road safety series stunned fans | Sports News.