‘இந்திய அணியின் எதிர்காலம்’!.. 3 ஃபார்மேட்களிலும் எப்படி கலக்கப்போறாரு பாருங்க.. சிஎஸ்கே வீரரை புகழ்ந்து தள்ளிய கவாஸ்கர்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுசென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடிய இளம் வீரர் ருதுராஜ் கெய்க்வாட் குறித்து சுனில் கவாஸ்கர் புகழ்ந்து பேசியுள்ளார்.
நியூஸிலாந்து அணி அணி வரும் நவம்பர் 17-ம் தேதி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இப்போட்டியில் விளையாட உள்ள வீரர்களின் பட்டியலை சமீபத்தில் பிசிசிஐ வெளியிட்டது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையடிய இளம் வீரர் ருதுராஜ் கெய்க்வாட்டுக்கு இந்திய டி20 அணியில் வாய்ப்பு கிடைத்துள்ளது.
இதுகுறித்து கருத்து தெரிவித்த இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர், ‘நியூஸிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடருக்கான வீரர்களின் தேர்வு சிறப்பாக உள்ளது. இந்த மாதிரியான தொடர்களில் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு அளித்தது சரியான முடிவு. அதிலும் ருதுராஜ் கெய்க்வாட் தேர்வு சிறப்பான ஒன்று.
ருதுராஜ் கெய்க்வாட் சமீப காலமாகவே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். அவரது ஷாட் செலக்ஷன் அற்புதமாக உள்ளது. அவர் 3 வகையான கிரிக்கெட்டிலும் விளையாட தகுதியான வீரர். போட்டியின் இக்கட்டான சூழ்நிலையில் கூட சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்துகிறார். விரைவில் சர்வதேச கிரிக்கெட்டில் மிகச்சிறந்த வீரராக மாற வாய்ப்புள்ளது’ என சுனில் கவாஸ்கர் பாராட்டி பேசியுள்ளார்.
சமீபத்தில் நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் அதிக ரன்கள் (635) குவித்து ஆரஞ்சு தொப்பியை ருதுராஜ் கெய்க்வாட் கைப்பற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.