விராட் கோலி பகிர்ந்த PRACTICE புகைப்படங்கள்… அனுஷ்கா ஷர்மாவின் ரொமாண்டிக் கமெண்ட்
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி இங்கிலாந்தில் பயிற்சியில் ஈடுபட்ட புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார்.

கோலி…
கடந்த இரண்டு ஆண்டுகளாக கோலி தன் கிரிக்கெட் வாழ்க்கையில் மிகப்பெரிய பின்னடைவை சந்தித்துள்ளார். கடந்த இரண்டு ஆண்டுகளாக அவர் ஒரு சதம் கூட அடிக்கவில்லை. இத்தனைக்கும் அவர் 100 போட்டிகளில் விளையாடியுள்ளார். நடந்து முடிந்த ஐபிஎல் தொடரிலும் அவரின் ஆட்டம் சராசரிக்கும் கீழாகவே அமைந்தது. ஆனால் ஒரு சில போட்டிகளில் சிறப்பாக விளையாடி ஆறுதல் அளித்தார். இந்நிலையில் அடுத்து இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணியில் இடம்பிடித்துள்ள கோலி தன் பழைய ஃபார்முக்கு மீண்டும் வருவார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் உள்ளது.
அனுஷ்கா ஷர்மாவின் கமெண்ட்…
இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒரே ஒரு டெஸ்ட் போட்டி ஜூலை 1ஆம் தேதி தொடங்கி ஜூலை 5ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதற்காக இந்திய அணி வீரர்களோடு இணைந்து பயிற்சியில் ஈடுபட்டு வரும் கோலி, தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் அந்த புகைப்படங்களைப் பகிர்ந்து “ சிறப்பாக பயிற்சி செய். மகிழ்ச்சியாக இரு (Practice well. Stay Happy)” என கேப்ஷன் கொடுத்திருந்தார். அந்த ட்வீட்டில் கமெண்ட் செய்த அவரின் மனைவி அனுஷ்கா ஷர்மா “and Stay cutie” என காதலோடு கமெண்ட் செய்ய அது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
கோவிட் 19 தொற்றா?
தற்போது இங்கிலாந்தில் உள்ள கோலி கோவிட் -19 தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. தனது மனைவி அனுஷ்கா மற்றும் மகள் வாமிகாவுடன் மாலத்தீவு சுற்றுலாவுக்கு பின் இந்தியா திரும்பிய பிறகு, லேசான அறிகுறிகளுடன், கோவிட்-19 தொற்று விராட் கோலிக்கு ஏற்பட்டுள்ளது. மற்றொரு தகவலாக கோலி கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டதாகவும் தற்போது முழுவதும் குணமாகிவிட்டதாகவும் பரவி வருகிறது. இதனால் முதல் டெஸ்ட் போட்டியில் கோலி விளையாடுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

மற்ற செய்திகள்
