லைசன்ஸ் இல்லாத துப்பாக்கியை இடுப்பில் சொருகியபடி வாக்கிங் சென்றவருக்கு நடந்த பரிதாபம்!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Siva Sankar | Mar 09, 2019 10:42 PM

கைத்துப்பாக்கி ஒன்றை சரியான முறையில் கையாள முடியாமல் போக, அதில் உள்ள குண்டு தவறுதலாக ஒருவரின் ஆண்குறியை சுட்டுள்ள சம்பவம் பரபரப்பை கிளப்பியுள்ளது.

man kepts non-licensed gun in waistband and shot himself accidentally

இண்டியானாவைச் சேர்ந்த மார்க் ஆண்டனி ஜோன்ஸ் என்பவர் தினசரி காலையில் நடைபயணம் மேற்கொள்ளும்போது தனது 9 எம்.எம் கைத் துப்பாக்கியையும் தன்னுடன் கொண்டு செல்லும் வழக்கத்தை கொண்டிருந்தார். இந்நிலையில் அண்மையில் தன் துப்பாக்கியை இடுப்புப் பகுதியில் சொருகி வைத்தபடி  நடைபயணத்தை அனுபவித்து நடந்து சென்றிருக்கிறார்.

இந்த நேரத்தில் அவரது இடுப்புப் பகுதியில் இருந்து துப்பாக்கி நழுவி விழுவது போன்று தெரியவர, உடனே துப்பாக்கியை பிடிக்க முற்பட்டிருக்கிறார் மார்க், அப்போது துரதிஷ்டவசமாக துப்பாக்கியின் ட்ரிகரில் தவறுதலாக கை பட்டு, குண்டுகள் அவரின் ஆண் குறியை நோக்கி பாய்ந்து தாக்கியுள்ளன் .

இந்த மோசமான அனுபவத்தை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள போது போலீஸாரிடம் தெரிவித்துள்ளார் மார்க். இதன் பிறகு விசாரணையில் ஈடுபட்ட போலீஸாருக்கு மார்க் உரிமம் இல்லாத துப்பாக்கி வைத்திருப்பது தெரியவந்துள்ளது. இதனால் அவர் கைதாக வாய்ப்பு இருப்பதாகவும் போலீஸார் தகவல்கள் தெரிவிக்கின்றனர்.

Tags : #ACCIDENT #GUNS #INDIANA #BIZARRE