இந்திய அணியின் கோச் ஆக வர இவரு ஆசைப்பட்டாரா?- சவுரவ் கங்குலி உடைத்த உண்மை

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Rahini Aathma Vendi M | Dec 19, 2021 11:45 AM

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக சில வாரங்களுக்கு முன்னர் தான் கிரிக்கெட் ஜாம்பவான் ராகுல் டிராவிட் பொறுப்பு ஏற்றார். இந்நிலையில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ - யின் தலைவர் சவுரவ் கங்குலி, அணியின் பயிற்சியாளராக வர விவிஎஸ் லட்சுமணுக்கு அதிக விருப்பம் இருந்ததாக குபீர் தகவலைத் தெரிவித்துள்ளார்.

sourav ganguly on indian legend keen to be head coach

அவர் மேலும், ‘லட்சுமண் இந்திய அணிக்குப் பயிற்சியாளராக வேண்டும் என்று அதிகம் விருப்பப்பட்டார். அது இப்போதைக்கு சாத்தியமான காரியம் இல்லை. ஆனால், லட்சுமணுக்கு கூடிய விரைவில் இல்லை என்றாலும், கண்டிப்பாக  அவரது ஆசை கைகூடும் என்கிற நம்பிக்கை எனக்கு இருக்கிறது' என்று ஓப்பனாக பேசியுள்ளார்.

ராகுல் டிராவிட், இந்தியாவின் பயிற்சியாளராக பொறுப்பேற்கும் முன்னர் தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைவராக இருந்தார். தற்போது டிராவிட், கோச் ஆக பதவியேற்றுள்ள நிலையில் தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைவராக லட்சுமண் பொறுப்பேற்று உள்ளார். டிராவிட், அந்தப் பதவியில் சுமார் 4 ஆண்டுகள் பொறுப்பு வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்தப் பொறுப்புகளுடன் இந்தியா ஏ மற்றும் அண்டர் 19 அணிகளுக்கும் டிராவிட் தான் பயிற்சியாளராக செயல்பட்டார்.

லட்சுமண் பற்றி வெளிப்படையாக பேசியுள்ள கங்குலி, டிராவிட் குறித்தும் ஓர் ரகசியத்தை வெளியிட்டு உள்ளார். ராகுல் டிராவிட்டுக்கு இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக இருக்க விருப்பமில்லை எனவும் கங்குலி தான் அவரது மனதை மாற்றினார் என்றும் கூறியுள்ளார்.

‘ராகுல் தான் இந்தியாவின் அடுத்தப் பயிற்சியாளராக வர வேண்டும் என்று வெகு நாட்களாகவே நாங்கள் நினைத்திருந்தோம். ஆனால், அவருக்கு அதில் விருப்பமில்லை. காரணம், இந்திய அணி, ஓர் அண்டில் பல மாதங்கள் வெளிநாடுகளுக்குப் பயணம் செய்து கிரிக்கெட் தொடர்களில் விளையாடும். இது அவருக்கு உகந்ததாக இல்லை. கிட்டத்தட்ட ஓர் ஆண்டில் 8 அல்லது 9 மாதங்கள் அவர் அணியுடன் இருக்க நேரிடும்.

இது அவரது குடும்பத்தை பாதிக்கும் என்று கருதினார். குறிப்பாக அவருக்கு இரண்டு குழந்தைகள் இருப்பதால் சரிபட்டு வராது என்று யோசித்தார். ஆனால், அவரை ஒரு வழியாக பயிற்சியாளராக பொறுப்பேற்க நாங்கள் ஒப்புக் கொள்ள வைத்தோம்’ என்று கங்குலி தெரிவித்துள்ளார்.

டிராவிட், நடந்து முடிந்த நியூசிலாந்து கிரிக்கெட் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய பயிற்சியாளராக அறிமுகம் ஆனார். அவர் பொறுப்பேற்ற முதல் தொடரிலேயே இந்திய அணி, வெற்றிவாகை சூடியது.

Tags : #சவுரவ் கங்குலி #ராகுல் டிராவிட் #விவிஎஸ் லட்சுமண் #SOURAV GANGULY #RAHUL DRAVID #VVS LAKSHMAN

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Sourav ganguly on indian legend keen to be head coach | Sports News.