"இந்தியா 'டீம்'ல இவரு ஆட வந்தா போதும்.. வெறித்தனமா அத விரும்பி பாப்பேன்.." பையன் வேற 'லெவல்'ங்க!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளிடையேயான கிரிக்கெட் தொடர் முடிவடைந்துள்ள நிலையில், இதில் அனைத்து தொடரையும் இந்திய அணியே வெற்றி பெற்று அசத்தியிருந்தது.

முன்னதாக, ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக நடைபெற்றிருந்த டெஸ்ட் தொடரையும் இந்திய அணி கைப்பற்றி வரலாறு புடைத்திருந்தது. அதிலும் குறிப்பாக, அதிக அனுபவமில்லாத இளம் வீரர்கள் பலர், மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அசத்தியிருந்தனர்.
இந்நிலையில், இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைவரான சவுரவ் கங்குலியிடம், 'இந்திய அணியில் உனக்கு பிடித்தமான வீரர் யார்?' என்பது பற்றி நிகழ்ச்சி ஒன்றில் கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு பதிலளித்த கங்குலி, 'இந்திய அணியில் பல வீரர்கள் உள்ளனர்.
அது மட்டுமில்லாமல், ஒரு பிசிசிஐ தலைவராக, இது போன்ற கேள்விக்கு ஒரு நபரை மட்டும் சிறந்த வீரர் என்பதை நான் கூறக்கூடாது என நினைக்கிறன். அணியில் உள்ள அனைத்து வீரர்களும் எனக்கு பிடித்தமானவர்கள் தான்.
ஆனால், ரோஹித் மற்றும் விராட் கோலி ஆகியோரின் ஆட்டத்தை ரசித்து பார்ப்பேன். அதே போன்று, இந்திய அணியின் இளம் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் ஆட்டத்தை நான் மிகவும் வெறித்தனமாக விரும்பி பார்ப்பேன். ஏனென்றால், அவர் தான் ஒரு முழுமையான மேட்ச் வின்னர் என நான் நினைக்கிறேன்.
பவுலிங்கில் ஷமி, பும்ரா ஆகியோர் சிறப்பாக பந்து வீசுகிறார்கள். அதே போன்று ஷர்துல் தாக்கூரின் பந்து வீச்சும் எனக்கு மிகவும் பிடிக்க காரணம், அவரிடமுள்ள தைரியமே ஆகும்' என கங்குலி தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் தொடர் இன்னும் சில தினங்களில் ஆரம்பமாகவுள்ள நிலையில், டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் காயத்தின் காரணமாக, ஐபிஎல் தொடரில் இருந்து விலகியுள்ளார். இதன் காரணமாக, டெல்லி அணியின் கேப்டனாக ரிஷப் பண்ட் நியமிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்
