"இன்னைக்கி இந்தியா 'டீம்' இப்டி சிறப்பா இருக்குன்னா... அதுக்கு அவரு ஒருத்தரு தான் 'முக்கிய' காரணம்.. பாராட்டித் தள்ளிய 'வாகன்'!! "யாரா இருக்கும்??"

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Ajith | Mar 26, 2021 07:58 PM

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஒரு நாள் போட்டித் தொடர் தற்போது நடைபெற்று வரும் நிலையில், முன்னதாக நடைபெற்றிருந்த டெஸ்ட் மற்றும் டி 20 தொடர் என இரண்டையும் இந்திய அணியே கைப்பற்றி அசத்தியிருந்தது.

michael vaughan credits rahul dravid for prasidh krishna success

அதிலும் குறிப்பாக, ஆஸ்திரேலிய தொடரில் இருந்தே, இந்திய அணியில் இடம்பெற்றுள்ள இளம் வீரர்கள், மிகச் சிறப்பாக ஆடி வருகின்றனர். முன்னணி பந்து வீச்சாளர்கள் இல்லாத போதும், சிராஜ் மற்றும் ஷர்துல் தாக்கூர் ஆகியோர் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக சிறப்பாக பந்து வீசி, வெற்றி பெற உதவினர்.

அதே போல, இங்கிலாந்து அணிக்கு எதிரான டி 20 தொடரில் அறிமுகமான சூர்யகுமார் யாதவ் (Suryakumar Yadav) மற்றும் இஷான் கிஷான் (Ishan Kishan) ஆகியோர், அறிமுக தொடர் என்ற பதற்றம் கூட இல்லாமல், எதிரணியினரின் பந்து வீச்சை சிதறடித்தனர்.

அதே போல, தற்போது நடைபெற்று வரும் ஒரு நாள் தொடரின் முதல் போட்டியில், அறிமுகமான பிரஷித் கிருஷ்ணா (Prasidh Krishna) மற்றும் க்ருணால் பாண்டியா (Krunal Pandya) ஆகியோரும் மிகச் சிறப்பாக ஆடி, இந்தியா வெற்றி பெற உதவியாக இருந்தனர். பிரஷித் கிருஷ்ணா 4 விக்கெட்களும், க்ருணால் பாண்டியா அறிமுக போட்டியில், வேகமாக அரை சதமடித்த வீரர் என்ற சாதனையும் படைத்திருந்தனர்.

கிரிக்கெட் உலகில் நம்பர் 1 அணியாக இந்தியா தற்போது வலம் வரும் நிலையில், இந்திய அணியின் தற்போதைய நிலைக்கு முக்கிய காரணம் யார் என்பதை இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் மைக்கேல் வாகன் (Michael Vaughan) தெரிவித்துள்ளார்.

'இந்திய அணி பின்னால் என்னென்ன நடைமுறைகள் செயல்படுகிறதோ, அது அனைத்தும் மிகச் சிறப்பான விஷயமாகும். இந்திய அணியில் இடம்பெற்றுள்ள இளம் வீரர்களின் செயல்பாட்டிற்கு, ஐபிஎல் தொடர் எவ்வளவு முக்கியமாக கருதப்படுகிறதோ, அதைவிட ராகுல் டிராவிட் (Rahul Dravid) பயிற்சியில் இந்திய ஏ அணி, இளம் வீரர்களுக்கு சரியான மனநிலையை விதைத்து வருகிறது.

மேலும் டிராவிட்டின் பயிற்சியில், அவர்கள் ஆடுவதால், சரியான பாதையிலும் பயணிக்கின்றனர். இதனால், சர்வதேச அணியில் வாய்ப்பு கிடைக்கும் போது, அங்கு நிலவும் நெருக்கடியை இளம் வீரர்கள், சர்வ சாதாரணமாக கையாளுகின்றனர். இதற்கு முழுக் காரணம் டிராவிட் மட்டுமே.

இதனை சரியாக செய்து முடிக்க, அவர் ஒருவரால் மட்டுமே முடியும். இது எதிர்காலத்திற்கும் நன்மை பயக்கும் செயலாகும்' என டிராவிட்டை பாராட்டி கருத்து தெரிவித்துள்ளார். அதே போல, பிரஷித் கிருஷ்ணாவின் சிறப்பான பந்து வீச்சையும் குறிப்பிட்டு, வாகன் பாராட்டியிருந்ததார்.

இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரில், இந்திய அணி வெற்றி பெற்றாலும், அதனை அதிகம் கிண்டல் செய்து வரும் வாகன், இந்திய அணியின் இந்த சிறப்பான இடத்திற்கு, இந்திய அணியின் முன்னாள் வீரர் டிராவிட்டை பாராட்டிக் கருத்து தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Michael vaughan credits rahul dravid for prasidh krishna success | Sports News.