‘எப்டி இருந்த நான் இப்டி ஆய்ட்டேன் பாருங்க’- ராகுல் டிராவிட் உடனான 17 ஆண்டுகால நினைவுகளைப் பகிரும் இளம் வீரர்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Rahini Aathma Vendi M | Nov 24, 2021 09:38 PM

இந்திய அணியில் இடம் பிடித்துள்ள இளம் கிரிக்கெட் வீரர் ஒருவர் 17 ஆண்டுகளுக்கு முன்னர் ராகுல் டிராவிட் உடன் இருக்கும் புகைப்படத்தையும் தற்போதைய புகைப்படத்தையும் சேர்த்துப் பகிர்ந்துள்ளார். இந்தப் புகைப்படம் தற்போது சமுக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

Young Indian player shares 17 years old pic with Dravid

‘எப்படி ஆரம்பித்து எப்படிப் போய்க்கொண்டிருக்கிறது’ என கேப்ஷன் உடன் இந்திய அணி வீரர் ஹர்ஷல் படேல் டிராவிட் உடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். இந்தியா- நியூசிலாந்து அணிகள் மோதிய இரண்டாவது டி20 கிரிக்கெட் போட்டியில் முதல் முறையாக இந்திய அணியின் சார்பில் அறிமுகம் செய்யப்பட்டார் ஹர்ஷல் படேல்.

Young Indian player shares 17 years old pic with Dravid

30 வயதில் இந்திய அணியில் அறிமுகம் ஆகியிருக்கும் ஹர்ஷல் படேல் இந்திய அணிக்குள் நுழைய போராடியது 10 ஆண்டுகள் காலம். கடந்த 2011-ம் ஆண்டு ஐபிஎல் போட்டிகள் மூலம் தனக்கான அறிமுகத்தை கிரிக்கெட் உலகத்தில் ஏற்படுத்திக் கொண்டார். இந்த ஆண்டின் தொடக்கத்தில் நடைபெற்ற ஐபிஎல் 2021-ல் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் என்ற பெருமையை அடைந்தார்.

Young Indian player shares 17 years old pic with Dravid

ஆர்சிபி அணிக்காக விளையாடிய இந்த ஹரியாணா வீரருக்கு ‘பர்பிள்’ தொப்பியும் கிடைத்தது. முதலில் ஆர்சிபி- மும்பை இந்தியன்ஸ் மோதிய முதல் போட்டியிலேயே மும்பை இந்தியன்ஸ் வீரர்களை தனது அபார பந்துவீச்சால் திணறடித்தார். ஐபிஎல்-ன் இரண்டாவது பாதி UAE-ல் நடந்த போதும் தனது வேகத்தை சற்றும் குறைக்காத அதிகப்பட்சமாக 32 விக்கெட்டுகள் வீழ்த்தி இந்திய அணியில் நுழைவதற்கான வாய்ப்பையும் உறுதி செய்தார்.

கடந்த டி20 உலகக்கோப்பை போட்டியின் போது வெங்கடேஷ் ஐயர் உடன் ஹர்ஷல் படேலும் ‘நெட் பவுலர்’ ஆக தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் முதல் போட்டியில் வெங்கடேஷ் ஐயர் தேர்ந்தெடுக்கப்பட்ட போது கொஞ்சமும் தளராமல் மீண்டும் தனது காத்திருப்பை கடைபிடித்த ஹர்ஷல் படேலுக்கு இரண்டாம் போட்டியில் வாய்ப்பு கிடைத்தது. அந்தப் போட்டியில் ஆட்ட நாயகன் விருதையும் கைப்பற்றினர் ஹர்ஷல் படேல்.

Young Indian player shares 17 years old pic with Dravid

இந்த சூழலில் கடந்த 2004-ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதி ராகுல் டிராவிட் உடன் ரசிகன் ஆக சிறு வயதி ஹர்ஷல் படேல் போட்டோ எடுத்துள்ளார். அன்று முதல் இன்று வரை 17 ஆண்டு கால வித்தியாசங்கள் கொண்ட டிராவிட் உடன் இருக்கும் புகைப்படத்தை பகிர அது தற்போது சமுக வலைதளங்களில் ஹிட் அடித்து வருகிறது.

Tags : #CRICKET #HARSHAL PATEL #RAHUL DRAVID #INDVSNZ

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Young Indian player shares 17 years old pic with Dravid | Sports News.