"பாபர் அசாம் ரொம்ப புடிக்கும்".. RJ பாலாஜியிடம் சிவகார்த்திகேயன் சொன்ன அடுத்த பந்தில் நடந்த சுவாரஸ்யம்!! FUN பண்ண SK 😅
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஉலகக் கோப்பை டி20 போட்டியில் இந்தியா பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டி இன்று நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் பிரபல நடிகரான சிவகார்த்திகேயனும் வர்ணனை செய்து வருகிறார்.
இந்த வருடத்திற்கான டி20 உலக கோப்பை போட்டிகள் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகின்றன. ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி உள்ள இந்தியா பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டி இன்று மேல்போர்னில் துவங்கி இருக்கிறது.
முன்னதாக இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்த இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பந்து வீச்சை தேர்வு செய்தார். இதனை அடுத்து பாகிஸ்தான் அணி பேட்டிங் செய்து வருகிறது. முதல் ஓவரை வீசிய புவனேஸ்வர் குமார் ஒரு ரன்னை மட்டுமே விட்டுக் கொடுத்து அசத்தினார். அதனை தொடர்ந்து இரண்டாவது ஓவரை வீச வந்த அர்ஷ்தீப் சிங் முதல் பந்தியிலேயே பாபர் அசாம் விக்கெட்டை தூக்கினார்.
இதனை தொடர்ந்து இன்னொரு துவக்க ஆட்டக்காரரான முகமது ரிஸ்வான் விக்கெட்டை நான்காவது ஓவரில் வீழ்த்தி அனைவரையும் திகைக்க வைத்திருக்கிறார் அர்ஷ்தீப் சிங். தொடர்ந்து இந்திய அணியின் பவுலர்கள் சிறப்பாக பந்துவீசி வருகின்றனர்.
முன்னதாக, இரண்டாவது ஓவரின் முதல் பந்தின் போது கமெண்டரியில் இருந்த சிவகார்த்திகேயன், பாபர் அசாமை தனக்கு மிகவும் பிடிக்கும் என குறிப்பிடுகிறார். அந்த சமயத்தில் அர்ஷ்தீப் சிங் இரண்டாவது ஓவரின் முதல் பந்தை வீசவே, அந்தப் பந்தில் lbw முறையில் பாபர் அசாம் அவுட் ஆனார். தான் சந்தித்த முதல் பந்திலேயே கோல்டன் டக்காகி பாபர் அசாம் வெளியேற, சிவகார்த்திகேயன் பாபர் அசாமை தனக்கு மிகவும் பிடிக்கும் எனக் கூறிய சமயத்திலே இந்த சம்பவம் அரங்கேறி இருந்தது.
அப்போது இதனை கவனித்த ஆர் ஜே பாலாஜி மற்றும் சிவகார்த்திகேயன் ஆகியோர், அது தொடர்பான வேடிக்கையான கருத்துக்களையும் பகிர்ந்து கொண்டனர். அதுமட்டுமில்லாமல் மற்றும் மீதமுள்ள பாகிஸ்தான் வீரர்களையும் தணிக்கும் மிகவும் பிடிக்கும் என்றும் சிவகார்த்திகேயன் குறிப்பிடுகிறார். இதற்கு காரணம் பாபர் அசாமை தனக்கு மிகவும் பிடிக்கும் என கூறியதும் அவர் அவுட் ஆனதால் மீண்டும் அதுபோல இந்தியாவுக்கு சாதகமான விஷயங்கள் நடக்கும் என்பதால் அப்படி அவர் குறிப்பிடுகிறார். இதனை கேட்டு சக வர்ணனையாளர்கள் கலகலத்துப்போயினர்.