"'தோனி'ய பத்தி இனிமே 'நீங்க' பேசக்கூடாது... உங்க 'வேலை'ய மட்டும் பாருங்க..." கடுப்பில் 'ரசிகர்' போட்ட 'மெசேஜ்'... பரபரப்பை கிளப்பிய 'சம்பவம்'!!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுதற்போது நடைபெற்று வரும் ஐபிஎல் சீசனில் முதல் முறையாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற முடியாமல் வெளியேறியுள்ளது.

மற்ற 7 அணிகளும் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுவதற்காக போராடி வருகிறது. சென்னை அணியை பொறுத்தவரையில், கேப்டன் தோனி இந்த முறை பெரிய அளவில் பார்மில் இல்லாதது அந்த அணிக்கு மிகப் பெரிய பின்னடைவாக அமைந்தது. தோனியின் பேட்டிங், சென்னை அணியின் நிலை என அனைத்தும் இந்த முறை கடும் விமர்சனத்துக்குள் ஆக்கப்பட்டது.
ஆனாலும், தொடர்ந்து சிஎஸ்கே அணிக்குத் தான் எங்கள் ஆதரவு என தோனி மற்றும் சென்னை அணி ரசிகர்கள் மிகப் பெரிய ஆதரவாக இருந்து வருகின்றனர். அது மட்டுமில்லாமல், சென்னை அணி மற்றும் தோனியின் மீது விமர்சனத்தை முன் வைப்பவர்களை கடுமையாக சாடியும் வருகின்றனர்.
இந்நிலையில், நியூசிலாந்து அணியின் முன்னாள் வீரரும் தற்போதைய ஐபிஎல் சீசனின் வர்ணனையாளருமான சைமன் டவுல் (Simon Doull) தோனி குறித்து தெரிவித்த கருத்திற்கு தோனி ரசிகர்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளனர். ரசிகர் ஒருவர் தெரிவித்த கருத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் சைமன் டவுல் பதிவிட்டுள்ளார். அதில், 'டியர் சைமன், தோனியை குறித்து கருத்து கூறுவதை இத்தோடு நிறுத்திக் கொள்ளுங்கள். அவரை விமர்சனம் செய்யும் அளவுக்கு நீங்கள் எதுவும் செய்து விடவில்லை' என்பவற்றை குறிப்பிட்டு ரசிகர் கருத்து தெரிவித்திருந்தார்.
Really sorry Pratik but in case you don’t understand the job of a commentator, it is to comment on the game and people playing it. Have a great day mate. #bizzare pic.twitter.com/j7S8wCw6sv
— Simon Doull (@Sdoull) October 27, 2020
இதனை பகிர்ந்த சைமன் டவுல், 'ஸாரி, ஒரு வர்ணனையாளரின் பணி என்ன என்பது உங்களுக்கு தெரியவில்லை. ஒருவரின் ஆட்டத்தை குறித்து கமெண்ட் செய்வதே எனது வேலை' என பதிலடி கொடுத்துள்ளார். இந்த சம்பவத்தில் சைமனிற்கு ஆதரவாக பலர் கமெண்ட் செய்து வருகின்றனர்.

மற்ற செய்திகள்
