VIDEO : 'மஞ்சள்' நிறத்தில் சும்மா வேற 'லெவலில்' வீடு கட்டிய 'தோனி' ரசிகர்,,. "அத பாத்துட்டு 'தல' சொன்னது இதான்..." வைரல் 'வீடியோ'!!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுசென்னை சூப்பர் கிங்ஸ் அணி, இதுவரை அனைத்து ஐபிஎல் தொடர்களிலும் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியிருந்த நிலையில், முதல் முறையாக இந்த முறை பிளே ஆஃப் வாய்ப்பை தவற விட்டுள்ளது.

தோனி உள்ளிட்ட பல முன்னணி வீரர்கள் பார்முக்கு வராமல் இருந்ததே சென்னை அணியின் மோசமான தோல்விகளுக்கு காரணமாகும். இந்த முறை பல விமர்சனம் சிஎஸ்கே அணி மீது வைக்கப்பட்டாலும், அந்த அணிக்கு ஆதரவாக ரசிகர்கள் தொடர்ந்து இருந்த வண்ணம் உள்ளனர்.
முன்னதாக, சில தினங்களுக்கு முன் தோனியின் தீவிர ரசிகரான கோபி கிருஷ்ணன் என்பவர் கடலூரில் தனது வீட்டை முழுவதுமாக மஞ்சள் நிறத்தில் வண்ணம் பூசினார். அது மட்டுமில்லாமல், பல இடங்களில் தோனியின் ஓவியங்களும் இடம்பெற்றிருந்தது. இந்த வீட்டின் புகைப்படங்கள் சிஎஸ்கே ரசிகர்கள் மத்தியில் கடும் வரவேற்பை பெற்று வந்த நிலையில், தற்போது தனது ரசிகரின் இல்லம் குறித்து தோனியும் கருத்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான வீடியோவை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தங்களது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. இதில் பேசிய தோனி, 'நான் சில தினங்களுக்கு முன் அந்த இல்லத்தின் புகைப்படங்களை இன்ஸ்டாவில் பார்த்தேன். அவர்கள் எனக்கான ரசிகர் மட்டுமில்லை. நமது சென்னை அணிக்கும் மிகப் பெரிய ரசிகர் தான். அந்த வீட்டின் மூலம் சிஎஸ்கே மற்றும் என் மீதான அவர்களது அன்பும், உணர்வுகளும் அதிகம் தெரிகிறது. அப்படி ஒரு வீட்டை வடிவமைப்பது அவ்வளவு எளிதல்ல. அவரின் குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவரும் சம்மதம் தெரிவிக்க வேண்டும்.
அதன் பிறகு தான் இப்படி ஒரு செயலை செய்ய முடியும். இன்ஸ்டா மற்றும் ட்விட்டரில் போடும் பதிவுகள் போல மறைந்து செல்லாமல் இது பல ஆண்டுகளுக்கு நிலைத்து நிற்க கூடிய ஒரு விஷயமாகும். அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன்' என தோனி அந்த வீடியோவில் தெரிவித்துள்ளார். சிஎஸ்கே ரசிகர்கள் மத்தியில் இந்த வீடியோவும் தற்போது அதிகம் வைரலாகி வருகிறது.
Thala Dhoni's sweet reaction to the sweetest tribute! 🦁💛
A big #WhistlePodu for Super Fan Gobikrishnan and his family for all the #yellove, literally. #HomeOfDhoniFan @GulfOilIndia @thenewsminute pic.twitter.com/1wxWVnP00l
— Chennai Super Kings (@ChennaiIPL) October 26, 2020

மற்ற செய்திகள்
