"'தோனி' 'FAMILY'யோட ரொம்ப க்ளோஸ்... '2' வருஷமா 'டீம்'ல இருந்து இப்போ தான் 'சான்ஸ்' கெடச்சுருக்கு..." யார் இந்த மோனு குமார்??...
முகப்பு > செய்திகள் > விளையாட்டுசென்னை சூப்பர் கிங்ஸ் ஏறக்குறைய பிளே ஆஃப் வாய்ப்பை இழந்து விட்ட நிலையில், அணியில் பல மாற்றங்கள் செய்து மீதமுள்ள லீக் போட்டிகளை ஆடி வருகிறது.

இன்று நடைபெற்ற பெங்களூர் அணிக்கு எதிரான போட்டியில் இந்த சீசனில் இதுவரை களமிறங்காமல் இருந்த மிட்சல் சாண்ட்னர், மோனு குமார் ஆகியோர் களமிறங்கினர். கடந்த சீசன்களில் சென்னை அணிக்காக சாண்ட்னர் ஆடியிருந்த நிலையில், முதல் முறையாக சென்னை அணிக்காக மோனு குமார் இன்று களமிறங்கினார்.
2018 ஆம் ஆண்டில் சென்னை அணியில் இடம்பெற்றிருந்த மோனு குமாருக்கு 2 வருடங்களுக்கு பின் இன்று தான் வாய்ப்பு கிடைத்துள்ளது. சென்னை அணியில் இவர் ஆடத் தேர்வானதும் இந்த மோனு குமார் யார் என நெட்டிசன்கள் தேடி வந்தனர். ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியை சேர்ந்த மோனு குமார், 2014 ஆம் ஆண்டில் U19 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணியில் இடம்பெற்று சில போட்டிகள் விளையாடியுள்ளார்.
சென்னை அணியில் இடம்பெற்றிருந்த மோனு குமார், 2 வருடங்களாக வலைப்பயிற்சியில் மட்டுமே பந்து வீசி வந்தார். அதே போல, தோனியின் மகள் ஷிவாவை தோனி போட்டிகளில் பங்கேற்க செல்லும் போது இவர் தான் பேபி சிட்டிங் செய்து வந்தார்.
தோனி குடும்பத்தினருக்கு மிகவும் நெருக்கமாக இருந்து வந்த மோனு குமார், இன்று களமிறங்கிய முதல் போட்டியில் 2 ஓவர்கள் பந்து வீசி விக்கெட்டுகள் எதுவும் எடுக்காமல் 20 ரன்கள் கொடுத்தார்.

மற்ற செய்திகள்
