இந்த ஒரு விஷயத்துல,,.. 'சிஎஸ்கே'வ எந்த டீமும் தொட்டது இல்ல... ஆனா 'மும்பை' இன்னைக்கி மொத்தமா செஞ்சு விட்டுருச்சு..." என்னவா இருக்கும்??
முகப்பு > செய்திகள் > விளையாட்டுசென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.

முதலில் பேட் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, தொடக்கத்தில் விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய நிலையில், சாம் குர்ரானின் அரை சதத்தின் உதவியுடன் 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 114 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து ஆடிய மும்பை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான இஷான் கிஷன் மற்றும் டி காக் ஆகியோர் ஆரம்பம் முதலே அதிரடி காட்டினர்.
பந்துகள் அனைத்தையும் இருவரும் சேர்ந்து பவுண்டரி லைனுக்கு விளாசித் தள்ளினர். இதன் காரணமாக, விக்கெட்டுகள் எதையும் இழக்காமல் எளிதாக மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி பெற்றது. இதுவரை நடைபெற்ற ஐபிஎல் போட்டிகளிலேயே சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்திய முதல் அணியாக மும்பை இந்தியன்ஸ் சாதனை செய்துள்ளது.
அது மட்டுமில்லாமல், இந்த தோல்வியின் மூலம் சென்னை அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுவதற்கான வாய்ப்பும் பறி போனது. இதுவரை சென்னை அணி பங்கேற்ற அனைத்து ஐபிஎல் சீசன்களிலும் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறாமல் இருந்ததில்லை. முதல் முறையாக பிளே ஆஃப் சுற்று வாய்ப்பையும் சென்னை அணி இழப்பதால் சிஎஸ்கே ரசிகர்கள் வருத்தமடைந்துள்ளனர்.

மற்ற செய்திகள்
