"இருக்குற 'பிரச்சனை'ல இது எல்லாம் தேவையா??..." 'சிஎஸ்கே'வின் ட்விட்டர் பதிவை வெச்சு செஞ்ச நெட்டிசன்கள்...
முகப்பு > செய்திகள் > விளையாட்டுசென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக தற்போது மோதி வரும் போட்டியில் 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்கள் இழப்புக்கு 125 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது.

தொடக்கத்திலேயே சென்னை அணி முக்கியமான விக்கெட்டுகளை இழந்த நிலையில், மிடில் ஆர்டரில் வந்த டோனி, ஜாதவ் ஆகியோர் அதிரடியாக ஆடி ரன் குவிக்கவில்லை. இதன் காரணமாக, சென்னை அணியால் பெரிய அளவில் ரன்களை குவிக்க முடியவில்லை.
இந்நிலையில், கிரிக்கெட் ரசிகர்கள் பலர் சென்னை அணியின் பேட்டிங்கை டெஸ்ட் இன்னிங்ஸில் ஆடுவது போல இருக்கிறது பலர் கிண்டல் செய்து வருகின்றனர். இந்த சீசனில் தோனியின் பேட்டிங்கும் மிகவும் சுமாராக போல இருப்பதால் அவரும் டெஸ்ட் இன்னிங்ஸ் ஆடுவதாகவும் தொடர்ந்து கூறி வருகின்றனர்.
Test-ing times. 🥺#WhistlePodu #WhistleFromHome #Yellove #CSKvRR
— Chennai Super Kings (@ChennaiIPL) October 19, 2020
இதனையடுத்து, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ட்விட்டர் பக்கத்திலும், இது தொடர்பாக பதிவு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில், 'Test-ing times' என பதிவிடப்பட்டுள்ளது. அதாவது, சோதனை காலம் என்பதை குறிப்பிட்டு அதில் டெஸ்ட் இன்னிங்ஸ் போல் சென்னை அணி ஆடியதையும் மறைமுகமாக குறிப்பிட்டுள்ளனர்.
சென்னை அணியின் இந்த பதிவிற்கு கீழ் அதிகம் கமெண்ட் செய்து வருகின்றனர்.

மற்ற செய்திகள்
