VIDEO: 'ஹெலிகாப்டர்' ஷாட் அடிச்சு பாத்துருப்பீங்க... 'ரொமாண்டிக்' டான்ஸ் ஆடி... பாத்து இருக்கீங்களா?
முகப்பு > செய்திகள் > விளையாட்டுBy Manjula | Jan 03, 2020 07:22 PM
இந்திய அணியின் கூல் கேப்டன் என புகழப்படும் முன்னாள் கேப்டன் தோனி தற்போது குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாக நேரத்தை செலவிட்டு வருகிறார். மனைவி சாக்ஷி மற்றும் நண்பர்களுடன் தோனி இருக்கும் புகைப்படங்கள் அவ்வப்போது வெளியாகி இணையத்தில் வைரலாகும்.

Here’s an adorable video from Mahi & Sakshi’s new year celebration.
A rare dancing clip of @msdhoni to make our year special!❤️😍#Welcome2020 #Dhoni #MSDhoni pic.twitter.com/E8yLW6NC5T
— MS Dhoni Fans Official (@msdfansofficial) January 1, 2020
அந்தவகையில் புத்தாண்டு தினத்தில் தன்னுடைய மனைவி சாக்ஷியுடன் தோனி ரொமாண்டிக் டான்ஸ் ஆடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதுவரை தோனி டான்ஸ் ஆடிய வீடியோக்கள் பெரிதாக வெளியானது இல்லை என்பதால் இந்த வீடியோ ரசிகர்கள் மத்தியில் லைக்ஸ்களை குவித்து வருகிறது.
மறுபுறம் உலகக்கோப்பை போட்டிகளுக்குப் பின் தோனி எந்தவொரு கிரிக்கெட் போட்டிகளிலும் பங்கேற்கவில்லை என்பதால், அவர் மீண்டும் எப்போது இந்திய தொடரில் இடம்பெறுவர் என ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
