'அஸ்வின்' சார் உங்க டீமுக்கு வருவாரா?.. என் டைம 'வேஸ்ட்' பண்ணாதீங்க.. 'கொந்தளித்த' கேப்டன்!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுBy Manjula | Oct 18, 2019 01:15 PM
இந்திய சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் கடந்த 2 வருடங்களாக பஞ்சாப் அணியின் கேப்டனாக இருந்து வந்தார். 2018-ம் ஆண்டு 7-வது இடத்தையும், கடந்த வருடம் 6-வது இடத்தையும் பிடித்தது. இதனால் புதிய கேப்டனாக கே.எல்.ராகுலை நியமிக்க பஞ்சாப் அணி முடிவு செய்தது. மேலும் டெல்லி அணி அஸ்வினை வாங்குவதாகவும் பேச்சு அடிபட்டது.
சமீபத்தில் பஞ்சாப் அணியின் புதிய ஆலோசகராக முன்னாள் கேப்டனும், பயிற்சியாளருமான அணில் கும்ப்ளே நியமிக்கப்பட்டார். தற்போது அவரது ஆலோசனையின்படி அஸ்வினை அணியில் வைத்துக்கொள்ள பஞ்சாப் அணி முடிவு செய்துள்ளது.
இந்தநிலையில் அஸ்வின் குறித்து ரசிகர் ஒருவர் கேட்ட கேள்விக்கு டெல்லி அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் அளித்த பதில் சூடான விவாதங்களை சமூக வலைதளங்களில் ஏற்படுத்தி உள்ளது. சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்கள் கேட்ட கேள்விகளுக்கு ஷ்ரேயாஸ் பதில் அளித்தார்.
அப்போது ரசிகர் ஒருவர்,'' அஸ்வின் சார் உங்க டீமுக்கு வருவாரா? என கேள்வி எழுப்பினார். இதற்கு ஷ்ரேயாஸ்,'' இதுபோன்ற சர்ச்சைக்குரிய கேள்விகளை என்னிடம் கேட்டு நேரத்தை வேஸ்ட் பண்ண வேண்டாம்,'' என பதிலளித்து இருக்கிறார்.