‘சாலையில் இங்கும் அங்கும் ஓடிக்கொண்டிருந்த சிறுவன்..’ பெண் ஓட்டுநர் செய்த காரியம்..
முகப்பு > செய்திகள் > உலகம்By Saranya | Jun 01, 2019 03:39 PM
அமெரிக்காவின் மில்வாகியில் பெண் பேருந்து ஓட்டுநர் ஒருவர் சாலையில் இங்கும் அங்கும் ஓடிக்கொண்டிருக்கும் சிறுவனைக் காப்பாற்றும் வீடியோ இணையத்தில் வெளியாகி அனைவரது பாராட்டையும் பெற்று வருகிறது.

அந்தப் பெண் ஓட்டுநர் சாலையில் வாகனங்களுக்கு நடுவே ஒரு சிறுவன் ஓடிக் கொண்டிருப்பதைப் பார்க்கிறார். உடனே பேருந்திலிருந்து இறங்கிச் சென்று சாலையைக் கடந்து அந்த சிறுவனைக் கைப்பிடித்து கூட்டிவருகிறார். பின்னர் போலீஸ் அதிகாரிக்கு தகவல் தெரிவித்து அந்த சிறுவனை பெற்றோரிடம் ஒப்படைக்க உதவுகிறார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் பகிரப்பட்டு அனைவராலும் பாராட்டப்பட்டு வருகிறது.
பின்னர் விசாரித்ததில் அந்த சிறுவன் மாற்றுத்திறனாளி என்பதும் பள்ளியிலிருந்து வெளியே வந்துள்ளார் என்பதும் தெரிய வந்துள்ளது. மில்வாகி பேருந்து ஓட்டுநர்கள் இதுபோல சிறுவர்களைக் காப்பாற்றுவது முதல்முறை அல்ல. சமீப ஆண்டுகளில் இதுவரை 10 குழந்தைகள் இதே மாதிரி காப்பாற்றப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
MCTS Driver Cecilia Nation-Gardner saved a little boy who was running through traffic after wandering away from school. Another story of #MCTSExcellence! https://t.co/1158YzCyhP pic.twitter.com/iMAsxeA4Nk
— RideMCTS (@RideMCTS) May 29, 2019
