VIDEO: தோனி மாதிரி 'ULTRA FAST' ஸ்டம்பிங்..! ஆஸ்திரேலியாவை மிரள வைத்த ராகுல்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியில் கே.எல்.ராகுல் மின்னல் வேக ஸ்டம்பிங் செய்து அசத்தினார்.
இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான் 2-வது ஒருநாள் போட்டி ராஜ்கோட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 6 விக்கெட் இழப்புக்கு 340 ரன்களை அடித்தது. இதில் அதிகபட்சமாக தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான் 96 ரன்களும், கே.எல்.ராகுல் 80 ரன்களும், கேப்டன் விராட் கோலி 78 ரன்களும் எடுத்தனர்.
இதனை அடுத்து 341 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலிய அணி விளையாடி வருகிறது. தொடக்க ஆட்டக்காரர்களாக ஆஸ்திரேலிய கேப்டன் ஆரோன் ஃபின்ஞ் மற்றும் டேவிட் வார்னர் களமிறங்கினர். இதில் வார்னர் 15 ரன்னில் மனிஷ் பாண்டேவின் கையில் கேட்ச் கொடுத்து அவுட்டானர். இதனை அடுத்து ஜோடி சேர்ந்த ஸ்டீவ் ஸ்மித் மற்றும் ஆரோன் ஃபின்ஞ் கூட்டணி நிதானமாக ஆட்டத்தை வெளிப்படுத்தியது.
அப்போது ஜடேஜா வீசிய ஓவரில் விக்கெட் கீப்பர் ராகுல் கண்இமைக்கும் நேரத்தில் ஸ்டம்பிங் செய்து ஆரோன் ஃபின்ஞ்-ஐ அவுட்டாக்கினார். இந்த நிலையில் 258 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து ஆஸ்திரேலிய அணி தடுமாறி வருகிறது.