'மும்பை' அணியில் இடம்பிடித்த 'அர்ஜுன் டெண்டுல்கர்'... சகோதரி வழங்கிய 'பாராட்டு'... இணையத்தில் செம 'வைரல்'!!... என்ன சொன்னாங்க தெரியுமா??..
முகப்பு > செய்திகள் > விளையாட்டு2021 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடருக்கான மினி ஏலம் நேற்று சென்னையில் வைத்து நடந்து முடிந்த நிலையில், அனைத்து அணிகளும் சில முக்கிய வீரர்களை அதிக தொகை கொடுத்து எடுத்திருந்தது.

இதில் கிரிக்கெட் கடவுள் என வர்ணிக்கப்படும் சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜுன் டெண்டுல்கரை மும்பை இந்தியன்ஸ் அணி, அவரின் அடிப்படை தொகையான 20 லட்ச ரூபாய்க்கே எடுத்தது. முன்னதாக, இவர் பெயர் ஏலத்தில் வர தாமதமானதால் எப்போது அவர் வருவார் என ரசிகர்கள் காத்திருந்தனர்.
இறுதியில் தான் அர்ஜுன் டெண்டுல்கரை ஏலத்தில் விட்ட நிலையில், சச்சின் டெண்டுல்கர் ஆடிய மும்பை இந்தியன்ஸ் அணியே அர்ஜுனையும் எடுத்தது. அர்ஜுன் டெண்டுல்கர் ஐபிஎல் போட்டியில் ஆடப் போவது குறித்து பலரும் பல விதமான கருத்துக்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்தனர். ஒரு மிகப்பெரிய நட்சத்திரத்தின் மகன் என்பதால் தான் அவருக்கு ஐபிஎல் தொடரில் ஆட மும்பை இந்தியன்ஸ் போன்ற அணியில் வாய்ப்பு கிடைத்தது என்பது போன்ற விமர்சனங்களையும் சிலர் முன் வைத்தனர்.
இந்நிலையில், அர்ஜுன் டெண்டுல்கர் ஐபிஎல் தொடரில் ஆடவுள்ளது குறித்து, அவரது சகோதரி சாரா டெண்டுல்கர், இன்ஸ்டா ஸ்டோரியில், 'உன்னுடைய சாதனையை ஒருவரும் உன்னிடம் இருந்து பறித்து விட முடியாது' என தெரிவித்துள்ளார்.
இது தற்போது வைரலாகி வருகிறது. பலர், அர்ஜுனுக்கு எதிரான கருத்துக்களை கூறி வரும் போது, நீ உன் திறமையால் தான் இந்த உயரத்திற்கு வந்தாய் என்பதை குறிக்கும் வகையில், சாரா டெண்டுல்கர், சகோதரரை அப்படி பாராட்டியுள்ளார்.
ஹர்திக் பாண்டியா, பும்ரா உள்ளிட்ட சில வீரர்கள், மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ஆடிய போது, தங்களது திறமையை வெளிப்படுத்தித் தான் சர்வதேச அணிக்கு தேர்வானார்கள். அதே போல, சச்சின் மகன் அர்ஜுன் டெண்டுல்கரும் மும்பை அணிக்காக ஆடி, தனது திறமையை வெளிப்படுத்தி சாதனை படைப்பாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

மற்ற செய்திகள்
