'ரெண்டு வருஷம் வெயிட் பண்ணியாச்சு, இனி முடியாது...' 'ஒருதலைக் காதலுக்காக...' ஒரு குழந்தையின் தகப்பன் செய்த வெறிச்செயல்...!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Issac | Feb 10, 2020 06:21 PM

மகாராஷ்டிர மாநிலம் வர்தா பகுதியில், 25 வயது கல்லூரி பேராசிரியை மீது தீவைத்து எரிக்கப்பட்ட சம்பவத்தில், அவர் சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்தார்.

Death of young woman lecturer burned to death

ஒருதலைக் காதலால் கடந்த இரண்டு ஆண்டுகளாக கல்லூரி பேராசிரியையிடம் காதலிக்குமாறு துன்புறுத்தி வந்த குற்றவாளி விக்கி நக்ரலே, கடந்த திங்கட்கிழமை, அவர் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்ததில், பலத்த காயங்களுடன் மிகவும் கவலைக்கிடமான நிலையில் அப்பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

திங்கட்கிழமை காலை கல்லூரிக்குச் சென்று கொண்டிருந்த போது நேரிட்ட இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட அவர், தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனளிக்காமல் இன்று காலை உயிரிழந்தார்.

இன்று காலை 6.55 மணிக்கு அவர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.முகம் மற்றும் தலைப் பகுதிகளில் ஆழமான தீக்காயங்கள் ஏற்பட்டதாலும், உள்ளுறுப்புகளும் தீக்காயத்தால் பாதிக்கப்பட்டதாலும் அவர் மரணம் அடைந்ததாகக் கூறப்படுகிறது.காதல் விவகாரத்தில் தீ வைக்கப்பட்ட பெண் மரணம் அடைந்ததை அடுத்து, குற்றவாளியின் வீடு மற்றும் உறவினர் வீடுகள் சூறையாடப்பட்டன. குற்றவாளி விக்கி நக்ரலேவுக்கு திருமணமாகி, ஒரு குழந்தை இருப்பது குறிப்பிடத்தக்கது.

Tags : #ONESIDELOVE