VIDEO: ‘கடைசிபால் 4 ரன் தேவை’.. அடிச்ச அடியில தெறிச்ச பந்து.. சூப்பர் ஓவரில் ஹிட்டடுச்ச ‘ஹிட்மென்’!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Selvakumar | Jan 29, 2020 05:40 PM

நியூஸிலாந்துக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் இந்தியா த்ரில் வெற்றி பெற்றது.

Rohit Sharma hit massive six in Super over against NZ

இந்தியா மற்றும் நியூஸிலாந்துக்கு இடையேயான கடைசி டி20 போட்டி இன்று (29.01.2020) ஹமில்டன் மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற நியூஸிலாந்து அணி முதலில் பவுலிங்கை தேர்வு செய்தது. அதன்படி இந்திய பேட்டிங் செய்ய களமிறங்கியது. இதில் தொடக்க ஆட்டக்காரர்களாக ரோஹித் ஷர்மா மற்றும் கே.எல்.ராகுல் களமிறங்கினர்.

அதிரடியாக விளையாடிய ரோஹித் ஷர்மா 65 ரன்கள் அடித்து விளாசினாட். மிடில் ஆர்டரில் களமிறங்கிய கேப்டன் விராட் கோலியும் (38) தன் பங்கிற்கு அதிரடி காட்ட 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 179 ரன்களை இந்தியா குவித்தது.

இதனை அடுத்து களமிறங்கிய நியூஸிலாந்து அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 179 ரன்களை எடுத்தது. இதனால் போட்டி சூப்பர் ஓவருக்கு சென்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த நியூஸிலாந்து அணி 1 ஓவரில் 17 ரன்கள் எடுத்தது. இதனை அடுத்து இந்திய அணியின் சார்பில் ரோஹித் ஷர்மா மற்றும் கே.எல்.ராகுல் களமிறங்கினர். கடைசி 1 பந்தில் 4 ரன்கள் அடித்தால் வெற்றி என இருந்தபோது சிக்ஸர் விளாசி ரோஹித் ஷர்மா அசத்தினார். இதனால் நியூஸிலாந்துக்கு கடைசி டி20 போட்டியில் த்ரில் வெற்றி பெற்று 3-0 என்ற கணக்கில் இந்தியா தொடரைக் கைப்பற்றியது.

Tags : #CRICKET #BCCI #NZVSIND #ROHITSHARMA #TEAMINDIA #SUPEROVER