"அத நெனச்சாலே வருத்தமா இருக்கு.." பல வருடத்திற்கு பிறகு 'ஐபிஎல்' தொடரில் கம்பேக் கொடுக்கும் 'புஜாரா'.. வேதனையுடன் பகிர்ந்த 'விஷயம்'!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களும் எதிர்பார்த்து வரும் 14 ஆவது ஐபிஎல் தொடர், ஏப்ரல் மாதம் 9 ஆம் தேதியன்று ஆரம்பமாகவுள்ளது.

இதன் முதல் போட்டியில், நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் ஆகிய அணிகள், சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மோதுகின்றன. முன்னதாக, இந்த தொடருக்கான ஏலம், கடந்த பிப்ரவரி மாதம், சென்னையில் வைத்து நடைபெற்றிருந்தது. இதில், யாரும் எதிர்பாராத வகையில், இந்திய டெஸ்ட் அணியின் நம்பர் 1 வீரர் புஜாராவை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஏலத்தில் எடுத்திருந்தது.
7 ஆண்டுகளாக ஐபிஎல் தொடரில் ஆடாமல் இருந்த புஜாராவை சென்னை அணி ஏலத்தில் எடுத்ததும், அனைத்து அணிகளின் உரிமையாளர்களும் கைத்தட்டி வரவேற்றனர்.
மேலும், டெஸ்ட் போட்டியில் நிதானமான ஆட்டத்தைக் கடைபிடிக்கும் புஜாரா, சென்னை அணியின் பயிற்சி முகாமில், பந்துகளை சிக்ஸர்கள் மற்றும் பவுண்டரிகள் என பறக்க விட்டது, சிஎஸ்கே ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதனால், முற்றிலும் மாறுபட்ட புஜாராவை ஐபிஎல் தொடரில் காணலாம் என்பதில், ரசிகர்கள் ஆவலாக உள்ளனர். இந்நிலையில், தன்னைப் போல ஒரு இந்திய வீரருக்கு, ஐபிஎல் தொடரில் இடம் கிடைக்காதது பற்றி, புஜாரா ஆதங்கத்துடன் கருத்து ஒன்றைத் தெரிவித்துள்ளார்.
'கடந்த சில ஆண்டுகளில், ஐபிஎல் தொடரில் பங்கு பெறாமல் இருந்த ஒரே இந்திய வீரர் நான் தான். ஆனால், இந்த சீசனில் தனது வாய்ப்பை தவற விடும் மற்றொரு வீரர் ஹனுமா விஹாரி. அவருக்கு ஐபிஎல் தொடரில், வாய்ப்பு கிடைக்காமல் போனது, வேதனையை ஏற்படுத்தியுள்ளது. இந்த சீசனில் நிச்சயம் ஹனுமா விஹாரி இடம்பெற்றிருக்க வேண்டும்' என புஜாரா கூறினார்.
தொடர்ந்து, இத்தனை ஆண்டுகளுக்கு பிறகு ஐபிஎல் தொடரில் தனக்கு வாய்ப்பு கிடைத்திருப்பது பற்றி பேசிய புஜாரா, 'நான் இந்திய அணிக்காக செயலாற்றியது தான் என்னை தற்போது இந்த இடத்திற்கு கொண்டு வந்து சேர்த்துள்ளது.
என்னை ஏலத்தில் எடுத்த போது, அனைத்து அணிகளும் கைதட்டி வரவேற்றதாக கூறினார்கள். இந்திய அணிக்காக நீங்கள் எதையாவது செய்யும் போது, நிச்சயம் மக்களும், அணியின் சக வீரர்களும் உங்களுக்காக மகிழ்ச்சியை வெளிப்படுத்துவார்கள்' என புஜாரா தனது ஐபிஎல் கம்பேக் பற்றி கருத்து தெரிவித்துள்ளார்.

மற்ற செய்திகள்
