"பையன் பேட்டிங் பண்றத பாக்க.. 'பொல்லார்ட்' மாதிரியே இருக்கு.." 'தமிழக' வீரருக்கு கிடைத்த வேற லெவல் 'அங்கீகாரம்'.. எதிர்பார்ப்பை எகிற வைத்த 'கருத்து'!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்திய கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்து வரும் ஐபிஎல் தொடர், ஏப்ரல் மாதம் 9 ஆம் தேதி ஆரம்பமாகவுள்ளது.

இதற்கான மினி ஏலம், கடந்த பிப்ரவரி மாதம், சென்னையில் வைத்து நடைபெற்றிருந்தது. இந்த ஏலத்தில், சீனியர் வீரர்களை எடுக்க, ஒவ்வொரு அணியினரும் போட்டி போட்டதைப் போல, சர்வதேச போட்டிகளில் ஆடாத இளம் வீரர்களை அணியில் இணைக்கவும் அதிகம் போட்டி நிலவியது. இதில், தமிழக இளம் வீரரான ஷாருக்கான் என்பவரை பஞ்சாப் கிங்ஸ் அணி, 5.25 கோடிக்கு பஞ்சாப் கிங்ஸ் அணி ஏலத்தில் எடுத்திருந்தது.
இந்த ஏலத்திற்கு முன்பாக நடைபெற்றிருந்த சையத் முஷ்டாக் அலி தொடரில், தமிழக அணி கோப்பையை கைப்பற்றியிருந்தது. அந்த அணியைச் சேர்ந்த ஷாருக்கான், மிகச் சிறப்பாக ஆடி, தனது அணி கோப்பையை கைப்பற்ற உதவியாக இருந்தார். இதனால், அவரை ஐபிஎல் அணிகள் எடுக்க போட்டி நிலவியதையடுத்து, பஞ்சாப் அணி ஷாருக்கானை ஏலத்தில் எடுத்தது.
இந்நிலையில், ஷாருக்கான் திறமை குறித்து பஞ்சாப் அணியின் தலைமை பயிற்சியாளர் அனில் கும்ப்ளே பேசியுள்ளார். 'ஷாருக்கான் ஆடுவதை பார்க்கும் போது, பொல்லார்ட் பேட்டிங் செய்வதை போல உள்ளது. நான் மும்பை இந்தியன்ஸ் அணியில் இருக்கும் போது, வலைப்பயிற்சியில் பொல்லார்ட் அதிரடியாக ஆடுவார். இதனால், அவருக்கு பந்து வீசும் போது, பந்தை நேராக அடிக்க வேண்டாம் என நான் கூறி விடுவேன்.
ஆனால், பஞ்சாப் அணியின் பயிற்சியின் போது, எனக்கு அதிகம் வயதனாதால், என்னால் பந்து வீச முடியாது. இதனால், நான் ஷாருக்கானுக்கு பந்து வீசப் போவதில்லை' என கும்ப்ளே தெரிவித்துள்ளார்.
“He reminds me a bit of Pollard!” 💪
𝐊𝐢𝐧𝐠𝐬 da apna 𝐊𝐡𝐚𝐧 😍#SaddaPunjab #PunjabKings #IPL2021 pic.twitter.com/yO4MCbDCpJ
— Punjab Kings (@PunjabKingsIPL) April 4, 2021
கிரிக்கெட் ஜாம்பவானான கும்ப்ளே, இளம் வீரர் ஒருவரை பொல்லார்டுடன் ஒப்பிட்டு கருத்து கூறியது மட்டுமில்லாமல், அவரின் அதிரடியைப் பற்றியும் பேசியுள்ளதால், இந்த சீசனில், நிச்சயம் ஷாருக்கான் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

மற்ற செய்திகள்
