"இந்த தடவ மிஸ்ஸே ஆகாது.." ஸ்கெட்ச் போட்டு தயாராகும் 'சிஎஸ்கே'?.. எதிர்பார்ப்பை எகிற வைத்த 'வைரல்' வீடியோ!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஐபிஎல் போட்டிகள் நெருங்கி வரும் வேளையில், ஒவ்வொரு அணியின் ரசிகர்களும், தங்களுக்கு விருப்பமான அணி எப்படி ஆடப் போகிறது என்பதை எதிர்பார்த்து காத்து வருகின்றனர்.

அதிலும் குறிப்பாக, தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மீது அனைவரின் கவனமும் சற்று அதிகமாகவே உள்ளது. இதற்கு காரணம், இதுவரை நடந்து முடிந்துள்ள 13 சீசன்களில், 12 சீசன்களில் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறிய ஒரே அணியாக இருந்த சென்னை அணி, கடந்த சீசனில் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறாமல், புள்ளிப் பட்டியலில் 7 ஆவது இடம் பெற்று வெளியேறியிருந்தது.
இதனால், சிறந்த கேப்டனாக விளங்கிய தோனியின் கேப்டன்சி மீதும், சிஸ்கேவின் வீரர்களை மாற்றி மாற்றி ஆட வைத்த முறையும் கடுமையான விமர்சனத்துக்குள் ஆகியிருந்தது. அது மட்டுமில்லாமல், கடந்த ஐபிஎல் தொடருக்கு முன்பாக, சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறப் போவதாக, திடீரென அறிவித்து, அனைவருக்கும் அதிர்ச்சியளித்திருந்தார் தோனி.
தொடர்ந்து, ஐபிஎல் போட்டிகளில் பேட்டிங் செய்த தோனியும் பெரிய அளவில் சோபிக்கவில்லை. மேலும், கிட்டத்தட்ட 6,7 மாத இடைவெளிக்கு பிறகு மீண்டும் ஆடவுள்ள தோனி, இதற்கிடையில் எந்த போட்டிகளிலும் ஆடவில்லை. இதனால், நடைபெறவுள்ள ஐபிஎல் சீசனிலும் தோனி பெரிய அளவில் ஜொலிப்பாரா என்ற சந்தேகம் எழுந்தது.
ஆனால், சென்னை அணியின் பயிற்சி முகாமில் தோனி ஆடும் விதம், அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. இது தொடர்பாக, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது.
இதில், பந்துகளை நாலாபுறமும் பறக்க விடும் தல தோனி, 'vintage' தோனி போன்று திரும்ப வந்துள்ளதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இதன் காரணமாக, தோனி அண்ட் கோ நிச்சயம் பழைய ஃபார்முக்கு வந்து, தங்களை நிரூபிக்கும் என்ற எதிர்பார்ப்பில் சிஎஸ்கே ரசிகர்கள், ஐபிஎல் தொடருக்காக காத்திருக்கின்றனர்.

மற்ற செய்திகள்
