முதல்ல கொஞ்சம் 'மேட்ச்' அவரு ஆடமாட்டாரு... 'ஆர்சிபி' அணியின் பிரபல வீரருக்கு 'திருமணம்'!.. வெளியான அதிகாரபூர்வ 'தகவல்'!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Ajith | Mar 24, 2021 11:13 PM

ஐபிஎல் அணிகளில் ஒன்றான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி, இதுவரை நடந்து முடிந்த 13 ஐபிஎல் தொடர்களில் ஒருமுறை கூட கோப்பையைக் கைப்பற்றியதில்லை.

Adam Zampa To Miss RCB\'s First Fixture To Get Married

சில சீசன்களில், கோப்பையை கைப்பற்றும் வாய்ப்பு இருந்தும், அதனை நூலிழையில் ஆர்சிபி அணி தவற விட்டுள்ளது. ஆனால், இந்த முறை ஐபில் கோப்பையை கைப்பற்ற வேண்டும் என்ற நோக்கில் உள்ளது. இதற்காக, கடந்த பிப்ரவரி மாதம் நடந்து முடிந்த ஏலத்தில், அதிரடி வீரர் மேக்ஸ்வெல், கைலி ஜேமிசன், டேனியல் கிறிஸ்டியன் உள்ளிட்ட முக்கிய வீரர்களை அணியில் எடுத்துள்ளது.

இந்த முறை, சற்று அதிக பலத்துடன் ஆர்சிபி அணி காணப்படும் நிலையில், அந்த அணியில் ஏற்கனவே தக்க வைக்கப்பட்டிருந்த ஆஸ்திரேலிய வீரரான ஆடம் ஸம்பா (Adam Zampa), ஐபிஎல் தொடரின் ஆரம்பத்தில், சில போட்டிகளில் பங்கேற்கமாட்டார் என தகவல்கள் பரவி வந்தது. இந்நிலையில், இதனை உறுதிப்படுத்தும் வகையில், பெங்களூர் அணியின் நிர்வாகி மைக் ஹெசன் (Mike Hesson) கருத்து தெரிவித்துள்ளார்.

அதில், 'ஆடம் ஸம்பாவுக்கு திருமணம் நடைபெறவுள்ளது. அவருக்கு இது மிக முக்கியமான தருணம். அதனை நாங்கள் மதிக்கிறோம். எனவே, அவர் திருமணத்திற்கு பிறகு, ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்பார். அப்போது அணிக்காக மிகச் சிறப்பான ஆட்டத்தை அவர் வெளிப்படுத்துவார்' என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

 

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி, மார்ச் 29 ஆம் தேதி பயிற்சி முகாமை தொடங்கவுள்ளது. இதற்காக, ஏபி டிவில்லியர்ஸ் 28 ஆம் தேதி வருகை தருவார் என்றும், மற்ற சில வீரர்கள் ஏப்ரல் 1 ஆம் தேதிக்குள் வருகை தருவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Adam Zampa To Miss RCB's First Fixture To Get Married | Sports News.