"என்ன பிரதர், இப்போ எப்படி இருக்கு??..." 'ரிஷப் பண்ட்' நக்கலாக கேட்ட 'கேள்வி'... வாயே தொறக்காம பதில் சொன்ன 'ரோஹித்'... 'வைரல்' வீடியோ!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளிடையே நேற்று நடைபெற்ற முதல் ஒரு நாள் போட்டியில், இந்திய அணி 66 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றிருந்தது.

கொரோனா தொற்றின் பரவல் காரணமாக, கிரிக்கெட் வீரர்கள் பல விதிகளை பின்பற்றி தான் போட்டிகளில் பங்கேற்று வருகின்றனர். ஒரு தொடர் ஆரம்பிக்கப்படுவதற்கு முன்பாகவும், அவர்கள் சில நாட்கள் தனிமைப்படுத்தப்பட்ட பின்னர் தான் அணி வீரர்களுடன் பயிற்சியில் இணைந்து கொள்வார்கள். அது மட்டுமில்லாமல், ஒவ்வொரு போட்டி முடியும் போதும், வீரர்கள் கொரோனா தொற்று பரிசோதனையையும் மேற்கொள்ள வேண்டும்.
கொரோனா தொற்று பரிசோதனைக்கு வேண்டி, மூக்கு அல்லது வாயின் வழியாக, பரிசோதனை மாதிரிகளை எடுக்கும் போது, ஒருவருக்கு அதிக எரிச்சல் ஏற்படலாம். இந்நிலையில், இரண்டாவது ஒரு நாள் போட்டிக்கு முன்பாக, இந்திய வீரர்கள் கொரோனா பரிசோதனை மேற்கொண்டனர். அப்போது, ரோஹித் ஷர்மாவுக்கு மாதிரிகள் எடுத்துக் கொண்டிருந்த போது, மற்றொரு வீரர் ரிஷப் பண்ட், அதனை வீடியோ எடுத்துள்ளார்.
அப்போது, மாதிரிகளை கொடுத்து விட்டு, சற்று விரக்தியுடன் வந்த ரோஹித் ஷர்மாவிடம், 'எப்படி இருக்கு சகோதரா' என ரிஷப் பண்ட் நக்கலாக கேட்டார். இதற்கு வாய் திறந்து எதுவும் பதில் சொல்லாத ரோஹித், தனது கை மூலம் சைகை ஒன்றைக் காட்டி பதில் சொன்னார். இது தொடர்பான வீடியோவை, ரிஷப் பண்ட் தனது இன்ஸ்டா ஸ்டோரியாக வெளியிட, நெட்டிசன்களிடையே இந்த வீடியோ வேற லெவலில் வைரலாகி வருகிறது.
Rohit😂❤️ #RohitSharma #RishabhPant
Via @RishabhPant17’s Instagram story😂 pic.twitter.com/atWQ7Hwzy3
— Rohit Sharma Stan (@rohiratstan) March 24, 2021
நேற்று நடைபெற்ற முதல் ஒரு நாள் போட்டியில், ரோஹித் ஷர்மாவின் முழங்கையில் காயம் ஏற்பட்டிருந்த நிலையில், அடுத்த போட்டியில் களமிறங்குவாரா என்பதில் சந்தேகம் உள்ளது.
ஆனால், இவருக்கு ஏற்பட்ட காயத்தின் பாதிப்பு பெரிய அளவில் இல்லை என்றும் கூறப்படுவதால், அடுத்த போட்டியில் அவர் ஆடுவது பற்றி, விரைவில் முடிவு செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மற்ற செய்திகள்
