“எனக்கு இப்படி எல்லாம் நடந்ததே இல்ல… டக் அவுட் ஆகிவிட்டு சிரித்தது ஏன்?” …. கோலி சொன்ன கூல் பதில்!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுRCB அணியின் நட்சத்திர ஆட்டக்காரர் கோலியின் வீடியோ ஒன்று இணையத்தில் கவனம் பெற்றுள்ளது.
கேப்டன்சி துறந்த கோலி..
2014 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞர்ஸ் அணியின் கேப்டன் பொறுப்பைப் பெற்ற கோலி 7 ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணியை விராட் கோலி வழிநடத்தினார். இருப்பினும் அந்த அணி ஐபிஎல் கோப்பையை இதுவரையில் வாங்காததால் அதற்கு பொறுப்பேற்று அணி கேப்டன் பதவியில் இருந்து விலகினார். அதே போல அடுத்தடுத்து டி 20, ஒருநாள் மற்றும் டெஸ்ட் அணிகளுக்கான கேப்டன்ஷிப்பில் இருந்து விலகினார். இது சர்வதேசக் கிரிக்கெட் ரசிகர்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியாக அமைந்தது.
Century இல்லாத 100 போட்டிகள்…
கடந்த இரண்டு ஆண்டுகளாக கோலி தன் கிரிக்கெட் வாழ்க்கையில் மிகப்பெரிய பின்னடைவை சந்தித்துள்ளார். கடந்த இரண்டு ஆண்டுகளாக அவர் ஒரு சதம் கூட அடிக்கவில்லை. இத்தனைக்கும் அவர் 100 போட்டிகளில் விளையாடியுள்ளார். தற்போது நடந்து வரும் ஐபிஎல் தொடரிலும் அவர் மிக மோசமாக விளையாடி வருகிறார். இதுவரை இந்த சீசனில் 3 முறை டக் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்துள்ளார்.
வைரல் வீடியோ…
இந்நிலையில் தற்போது கோலியின் வீடியோ ஒன்று இணையத்தில் பரவி வருகிறது. RCB அணியின் சமூகவலைதளப் பக்கத்தில் பகிரப்பட்டுள்ள அந்த வீடியோவில் நேர்காணல் எடுக்கும் நபர் கலாய்க்கும் விதமாக கேட்கும் கேள்விகளுக்கு கோலி கூலாக பதில் சொல்லியுள்ளார்.
கோலியின் ஜாலி முகம்…
அந்த வீடியோவில் “உங்களுக்கு வளர்ப்புப் பிராணிகள் பிடிக்குமா” என்று கேட்க “பிடிக்கும்” எனக் கோலி கூறுகிறார். அதையடுத்து அவர் “என்ன பிராணி வளர்க்கிறீர்கள்” என்று கேட்க “நாங்கள் அடிக்கடி வீட்டை விட்டு வெளியே செல்வதால் எங்களால் போதுமான கவனத்தை செலுத்த முடியாது என்பதால் இப்போது எதையும் வளர்ப்பதில்லை” எனக் கூறுகிறார். அதற்கு அவர் “சமீபத்தில் நீங்கள் இரண்டு வாத்துகளை வாங்கியுள்ளீர்களே(இரண்டு முறை டக் அவுட் ஆனதை) குறிப்பிட்டு சொல்ல, கோலி அவரின் கிண்டலை ஜாலியாக ஏற்றுக்கொண்டு சிரிக்கிறார்.
மேலும் டக் அவுட் ஆனபோதும் ஏன் சிரித்தீர்கள் என்று கேட்டபோது “எனக்கு இதற்கு முன்பு இதுபோல நடந்ததில்லை. அதனால் சிரித்தேன்” எனக் கூறியுள்ளார். இன்னும் பல்வேறு கேள்விகளுக்கு கோலி இதுபோல ஜாலியாக பதிலளித்துள்ளார்.
8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். https://behindwoods.com/bgm8