தோனியை மிக மோசமான கெட்ட வார்த்தையில் திட்டிய விராத் கோலி? கொந்தளித்த CSK ரசிகர்கள்! வைரலாகும் வீடியோ
முகப்பு > செய்திகள் > விளையாட்டுநேற்றைய ஐபிஎல் போட்டியில் சென்னை - பெங்களூர் அணிகள் மோதின. இப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தோல்வி அடைந்தது.
இந்த போட்டியில், முதலில் பேட்டிங் செய்த பெங்களூர் RCB அணி, 20 ஓவர்கள் முடிவில், 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 173 ரன்கள் எடுத்தது. பின்னர் இலக்கை நோக்கி ஆடிய சென்னை CSK அணி 20 ஓவர்கள் முடிவில், 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 160 ரன்கள் மட்டுமே எடுத்து பரிதாபமாக தோல்வி அடைந்தது. இந்த தோல்வியின் மூலம், சென்னை CSK அணியின் பிளே ஆப் கனவு கிட்டத்தட்ட தகர்ந்து விட்டது.
தோனி விக்கெட்டான போது, கோலி கொடுத்த ரியாக்ஷன் தற்போது அதிகம் வைரலாகி வருகிறது. ஹேசல்வுட் வீசிய 18 ஆவது ஓவரின் முதல் பந்தில், தோனி 2 ரன்கள் மட்டுமே எடுத்து அவுட்டானார். டீப் மிட் விக்கெட் பகுதியில் நின்ற ரஜத் பட்டிதாரிடம் கேட்ச் ஆனார்.
Scenes after Virat's wicket and
Scenes after Ms Dhoni's Wicket find the difference 🙂
As a Virat Kohli fan, this behaviour is unexpected from him. He could've celebrated the wicket by not using this foul language. On the field, behaviour matters in the game of cricket. pic.twitter.com/Ulwi1AisvS
— Rahul (@Iamrahul8787) May 4, 2022
அப்போது விராத் கோலி, தோனி அவுட் ஆன தருணத்தில் தோனி குறித்து மிக மோசமான வார்த்தையை சத்தமாக கத்தி ஆக்ரோஷமாக விக்கெட்டை கொண்டாடினார்.
இது குறித்து சென்னை அணி & தோனி ரசிகர்கள் டிவிட்டரில் கொந்தளித்தனர். சிலர் கோலி மீதான மரியாதை போய் விட்டதாக கூறினர். சிலர் தோனி இது போல் யாரையும் திட்ட மாட்டார் என்றும், கோலி மற்ற வீரர்களின் குடும்ப பெண்களை திட்டுவது கண்டிக்கதக்கது என்றும் கூறினர்.
சில கோலி ரசிகர்கள், கோலியின் செயலை சாதாரண ஒன்று என்றும், விக்கெட் விழ்ந்த பின் ஆக்ரோஷமாக இது போல் கொண்டாடுவது வாடிக்கை தான் என்றும் கூறி வருகின்றனர்.
போட்டி முடிந்த பின் தோனியும், கோலியும் கட்டிபிடித்து நன்றியை பரிமாறிக்கொண்டதும் குறிப்பிடத்தக்கது.
8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க்.
https://www.behindwoods.com/bgm8/