"மேடை, தாலி எல்லாம் ரெடி.." மேடையில மாப்பிள்ளை கோலத்த பாத்துட்டு 'நோ' சொன்ன மணப்பெண்.. "கல்யாண நாள்'லயும் இப்படியா??
முகப்பு > செய்திகள் > இந்தியாசமீப காலமாகவே, திருமண நிகழ்வின் போது மேடையில் அரங்கேறும் பல விஷயங்கள், மக்கள் மத்தியில் அதிகம் வைரலாகும்.
Also Read | 20 கோடி பேர்ல ஒருத்தருக்கு தான் இந்த பிரச்சனை.. "தண்ணி'ய பாத்ததும் நான் படுற பாடு இருக்கே.."
கடந்த சில தினங்களுக்கு முன், திருமண மேடை ஒன்றில், மாப்பிள்ளையை கன்னத்தில் அறைந்து விட்டு மேடையில் இருந்து மணப்பெண் இறங்கிச் சென்ற சம்பவமும், இன்னொரு பக்கம் திருமணமே வேண்டாம் என மேடையில் இருந்து மணப்பெண் இறங்கி ஓடிய நிகழ்வும், வீடியோக்களாக வெளியாகி, அதிகம் பரபரப்பை உண்டு பண்ணி இருந்தது.
இவை அனைத்தையும் விட, திருமணத்திற்கு பல மணி நேரம் தாமதமாக மாப்பிள்ளை வந்ததால், கோபத்தில் மணப்பெண்ணுக்கு வேறு ஒருவருடன் திருமணம் செய்து வைத்திருந்த சம்பவமும் அதிகம் வைரலாகி இருந்தது.
ஜாம் ஜாம்'ன்னு ஏற்பாடு..
இப்படி நாளுக்கு நாள், திருமணம் நடக்க இருந்த நேரத்தில், சில நிமிட துளிகளில் முடிவே மாறும் அளவுக்கு யாரும் எதிர்பாராத வகையில் சம்பவங்கள் நடந்து வருகிறது. தற்போது அதே போல ஒரு விஷயம், மத்திய பிரதேச மாநிலத்தில் அரங்கேறி உள்ளது. வினோத் சுக்லா என்பவரின் மகளான நேஹா என்பவருக்கு நேரு நகர் பகுதியைச் சேர்ந்த பியூஷ் மிஸ்ரா என்பவருடன் திருமணம் நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.
இதற்காக, மணமகனின் ஊர்வலம் முடிந்து, அவரை மணப்பெண் வீட்டார் முறைப்படி வரவேற்கவும் செய்திருந்தனர். இதனைத் தொடர்ந்து, மாப்பிள்ளை மற்றும் மணப்பெண் ஆகியோருக்கு மாலை அணிவித்து, மேடையில் ஏற்றினர். திருமண மேடையும் தயாராக இருக்க, ஏற்பாடுகளும் பக்காவாக செய்யப்பட்டிருந்த நிலையில், ஏராளமான விருந்தினர்கள் அங்கு சூழ்ந்திருந்தனர்.
நோ சொன்ன மணப்பெண்
அப்போது தான், மணப்பெண்ணுக்கு ஒரு விஷயம் தெரிய வர, திடீரென திருமண நிகழ்வினை தொடர்ந்து நடத்த மறுப்பு தெரிவித்து விட்டார். இதற்கு காரணம் என்ன என்பது பற்றி விசாரித்த போது தான், மேடையில் நின்ற மாப்பிள்ளை, குடித்து விட்டு போதையில் இருந்தது தெரிய வந்துள்ளது. அங்கிருந்த பலரும், மணப்பெண்ணை சமரசம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டனர்.
கடைசியில என்னாச்சு??..
ஆனால், தன்னுடைய திருமணத்திற்கே மது அருந்தாமல் இருக்க முடியாத ஒருவர், திருமணத்திற்கு பிறகு எப்படி அதனை தவிர்ப்பார் எனக்கூறி, மணப்பெண் முற்றிலுமாக மறுத்து முறையிட்டுள்ளார். அங்கிருந்த பலரும், பெண்ணின் முடிவுக்கு ஆதரவு தெரிவித்திருந்தனர். தொடர்ந்து, இது தொடர்பான விஷயம், போலீஸ் நிலையம் வரை சென்ற நிலையில், பரஸ்பர ஒப்புதலுடன் இரு தரப்பினரும் தாங்கள் பரிமாறிக் கொண்ட பணம் மற்றும் மதிப்புமிக்க பொருட்களை திருப்பித் தர ஒப்புக் கொண்டனர்.
8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். https://behindwoods.com/bgm8