அடுத்தடுத்து சிக்ஸர்.. பொளந்துகட்டிய தினேஷ் கார்த்திக்.. பெவிலியனுக்குள்ள வந்ததும் கோலி செஞ்ச மரியாதை.. வைரலாகும் வீடியோ..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுபெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் தினேஷ் கார்த்திக் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய நிலையில், அவருக்கு கோலி தலை வணங்கி மரியாதை செலுத்திய வீடியோ தற்போது சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

பெங்களூரு Vs ஹைதராபாத்
15 வது ஐபிஎல் தொடரின் 54 வது லீக் போட்டியில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியை எதிர்கொண்டது சன்ரைஸர்ஸ் ஹைதராபாத். நேற்று மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நடைபெற்ற இந்தப்போட்டியில் டாஸ் வென்ற பெங்களூர் அணியின் கேப்டன் டூபிளசிஸ் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதனை அடுத்து விராட் கோலி மற்றும் டூபிளசிஸ் ஓப்பனிங் செய்தனர்.
விராட் கோலி, ரன் ஏதும் எடுக்காமல் அவுட்டாகி ஏமாற்றம் அளித்தார். அதனைத் கூட்டணி சேர்ந்த டூபிளசிஸ் – ராஜட் படித்தர் ஜோடி, ஹைதராபாத் அணியின் பந்துவீச்சை நிதானமாக எதிர்கொண்டு ரன் சேர்த்தது. பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்த கூட்டணி இரண்டாவது விக்கெட்டுக்கு 105 ரன்கள் சேர்த்திருந்த போது, ராஜட் படித்தர் (48) விக்கெட்டை இழந்தார்.
அதிரடி
இதனால் பேட்டிங் செய்யவந்த அதிரடி ஆட்டக்காரர் மேக்ஸ்வெல் 24 பந்துகளில் 33 ரன்கள் குவித்தது விக்கெட்டை பறிகொடுத்தார். இதை தொடர்ந்து களத்திற்கு வந்தார் தினேஷ் கார்த்திக். வெறும் 8 பந்துகளில் 4 சிக்ஸர் மற்றும் 1 பவுண்டரியுடன் 30 ரன்கள் விளாசி ரசிகர்களை உற்சாகப்படுத்தினார் தினேஷ் கார்த்திக். இறுதிவரையில் களத்தில் இருந்த டூபிளசிஸ் 50 பந்துகளில் 73 ரன்கள் சேர்த்தார். இதனால் பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் வெறும் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 192 ரன்கள் குவித்தது.
வெற்றி
இதனைத் தொடர்ந்து 193 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஹைதராபாத் அணி ஆரம்பம் முதலே விக்கெட்டுகளை பறிகொடுத்தது. அந்த அணியில் ராகுல் திரிபாதி மட்டும் 37 பந்துகளில் 57 ரன்கள் குவித்தார். அவருக்கு பிறகு வந்த அனைவரும் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுக்கவே 19.2 ஓவரில் ஹைதராபாத் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 125 ரன்கள் மட்டுமே எடுத்து. இதன்மூலம் பெங்களூரு அணி 67 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை ருசித்தது.
கோலி கொடுத்த மரியாதை
வெறும் 8 பந்துகளை சந்தித்து 4 சிக்ஸர் மற்றும் 1 பவுண்டரியுடன் 30 ரன்கள் விளாசி பெவிலியன் திரும்பிய தினேஷ் கார்த்திக்கை தலை வணங்கியபடி வரவேற்றார் விராட் கோலி. இந்த வீடியோ தற்போது சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
— Diving Slip (@SlipDiving) May 8, 2022
8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். https://behindwoods.com/bgm8

மற்ற செய்திகள்
