‘நீங்க வேறலெவல் பாஸ்’.. கோலி அரைசதம் அடிச்சதும் ஷமி செஞ்ச செயல்.. ‘செம’ வைரல்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுவிராட் கோலி அரை சதம் அடித்ததும் முகமது சமி செய்த செயல் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது.

ஐபிஎல் தொடரின் இன்றைய (30.04.2022) 43-வது லீக் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரரு அணிகள் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற பெங்களூரு அணியின் கேப்டன் டு பிளசிஸ் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி, 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 170 ரன்கள் எடுத்தது. இதில் அதிகபட்சமாக விராட் கோலி 58 ரன்களும், ரஜத் படிதார் 52 ரன்களும், மேக்ஸ்வெல் 33 ரன்களும் எடுத்தனர். குஜராத் அணியை பொறுத்தவரை பிரதீப் சங்வான் 2 விக்கெட்டுகளும், முகமது சமி, ரஷித் கான், லாக்கி பெர்குசன் மற்றும் அல்ஜாரி ஜோசப் ஆகியோர் தலா 1 விக்கெட் எடுத்தனர்.
இந்த நிலையில் இப்போட்டியில் பெங்களூரு அணியின் தொடக்க ஆட்டக்காரர் விராட் கோலி அரை சதம் அடித்ததும், குஜராத் அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது சமி அவரது தோளில் தட்டி வாழ்த்து தெரிவித்தார். முகமது சமியின் இந்த செயல் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்று வருகிறது.
— Diving Slip (@SlipDiving) April 30, 2022
நடப்பு ஐபிஎல் தொடரில் விராட் கோலி மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தார். அதில் தொடர்ந்து 2 முறை டக் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார். இதனால் அவர் மீது கடுமையான விமர்சனங்கள் வைக்கப்பட்டன. இந்த சூழலில் இன்றைய போட்டியில் அவர் அரைசதம் அடித்தது ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது. மேலும் இப்போட்டியில் முகமது சமி வீசிய 17-வது ஓவரில் விராட் கோலி அவுட் ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது.
8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க்: http://www.behindwoods.com/bgm8/

மற்ற செய்திகள்
