“இதுக்காகதான இத்தன நாளா காத்திட்டு இருந்தோம்”.. ‘கிங்’ கோலியின் தரமான சம்பவம்.. அதிர்ந்த மைதானம்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுகுஜராத் அணிக்கு எதிரான ஐபிஎல் லீக் போட்டியில் பெங்களூரு அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி அரை சதம் அடித்து அசத்தியுள்ளார்.

ஐபிஎல் தொடரின் 43-வது போட்டி இன்று (30.04.2022) மும்பை மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டு பிளசிஸ் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதுகின்றன. டாஸ் வென்ற பெங்களூரு அணி பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடி வருகிறது.
தொடக்க ஆட்டக்காரர்களாக விராட் கோலி மற்றும் டு பிளசிஸ் களமிறங்கினர். இதில் டு பிளசிஸ் டக் அவுட் ஆகி வெளியேற, அடுத்து வந்த ரஜத் படிதார் உடன் விராட் கோலி ஜோடி சேர்ந்தார். இந்த கூட்டணி நிதானமாக விளையாடி ரன்களை குவித்தது.
இதில் விராட் கோலி 58 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். நடப்பு ஐபிஎல் தொடரில் விராட் கோலி அடித்த முதல் அரைசதம் இதுதான். அதனால் மைதானத்தில் இருந்த ரசிகர்கள் ஆரவாரமாக கத்தி கொண்டாடினர். அப்போது விராட் கோலியின் மனைவி அனுஷ்கா சர்மாவும் உற்சாகமாக கத்தி விராட் கோலியின் அரைசதத்தை கொண்டாடினார்.
நடப்பு ஐபிஎல் தொடரை தொடர்ந்து மோசமான ஆட்டத்தை விராட் கோலி வெளிப்படுத்தி வந்தார். அதில் இரண்டு முறை டக் அவுட் ஆகி வெளியேறியதால், அவர் மீது கடுமையான விமர்சனங்கள் வைக்கப்பட்டது. இந்த நிலையில் இன்றைய போட்டியில் விராட் கோலி அரை சதம் அடித்தது ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
First Fifty for Virat Kohli in this IPL 2022. He scored 50* runs from 45 balls including 6 Fours and 1 Six against GT. pic.twitter.com/lwSyBqUGZb
— CricketMAN2 (@ImTanujSingh) April 30, 2022
Anushka Sharma pouring every Virat Kohli fans emotions!🥺❤️#RCBvsGT pic.twitter.com/rzHl8kTa76
— Aryan Pandey (@imaryan_1828) April 30, 2022
8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க்: http://www.behindwoods.com/bgm8/

மற்ற செய்திகள்
