"அது மட்டும் நடந்துச்சு, கிரிக்கெட் பாக்குறதையே நான் நிறுத்திடுவேன்.." டிவில்லியர்ஸ் சொன்ன பரபரப்பு கருத்து
முகப்பு > செய்திகள் > விளையாட்டுதென்னாப்பிரிக்க வீரரான ஏபி டிவில்லியர்ஸ், வெளிநாட்டு வீரராக இருந்தாலும், அவருக்கு இந்தியாவிலும் பெரிய அளவில் ரசிகர்கள் கூட்டம் உண்டு.
ஐபிஎல் தொடரில் பெங்களூர் அணிக்காக பல ஆண்டுகள் தொடர்ந்து ஆடிய டிவில்லியர்ஸுக்கும், கோலிக்கும் இடையே கிரிக்கெட் என்பதைத் தாண்டி, பெரிய நட்பு பந்தமும் உள்ளது.
பெங்களூர் அணிக்காக எக்கச்சக்க போட்டிகள் ஆடி, அதனை வெற்றியாக மாற்றிக் கொடுத்துள்ள டிவில்லியர்ஸ், கடந்த சீசனில் இறுதியாக ஐபிஎல் போட்டியை ஆடி இருந்தார்.
ஐபிஎல் போட்டியில் இருந்து விலகிய ஏபிடி
ஏற்கனவே சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வினை அறிவித்திருந்த டிவில்லியிர்ஸ், நடப்பு ஐபிஎல் தொடருக்கு முன்பாக, ஐபிஎல் உள்ளிட்ட அனைத்து விதமான கிரிக்கெட் போட்டியில் இருந்தும் ஓய்வு பெறுவதாக தனது முடிவினை டிவில்லியர்ஸ் அறிவித்திருந்தார்.
ஆர்சிபி அணியில் அவரை பார்க்கலாம் என எதிர்பார்த்து காத்திருந்த ரசிகர்களுக்கு கடும் ஏமாற்றமும், அதிர்ச்சியும் மிஞ்சி இருந்தது. இதனால், அவரை இனி எப்படி கிரிக்கெட் போட்டிகளில் பார்க்க முடியும் என்றும் ரசிகர்கள் வேதனை அடைந்தனர்.
கிரிக்கெட் பாக்குறத நிறுத்திடுவேன்..
இந்நிலையில், சமீபத்தில் ஐபிஎல் தொடரில் கோலி ஃபார்ம் குறித்து அதிக விமர்சனங்கள் எழுந்தது பற்றி, டிவில்லியர்ஸ் கருத்து தெரிவித்திருந்தார். நிச்சயம் கோலி தன்னிடம் உள்ள தவறுகளைத் திருத்திக் கொண்டு பழைய ஃபார்முக்கு திரும்புவார் என்றும் கூறினார். இதனிடையே, கிரிக்கெட் போட்டிகள் பார்ப்பதை நிறுத்துவது பற்றி, முக்கிய கருத்து ஒன்றையும் டிவில்லியர்ஸ் குறிப்பிட்டுள்ளார்.
"டெஸ்ட் கிரிக்கெட் தான் என்னுடைய நம்பர் 1 ஃபார்மட். அனைத்தும் சவாலாக இருப்பதால், ஐந்து நாட்களும் களத்தில் இருப்பது, திருப்தி அளிக்கும். ஆனால், இந்த கடினமான கிரிக்கெட் ஃபார்மட்டில் உள்ள சவாலை ஏன் பலரும் விரும்பாமல் இருக்கிறார்கள் என்பது எனக்கு புரியவில்லை. ஒரு வேளை டெஸ்ட் கிரிக்கெட் இல்லை என்றால், நான் கிரிக்கெட் பார்ப்பதையே நிறுத்தி விடுவேன்" என தெரிவித்துள்ளார்.
டி 20 போட்டியில் அதிரடி ஆட்டம் ஆடியுள்ள டிவில்லியர்ஸ், டெஸ்ட் போட்டிகளிலும் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி, பல சாதனைகளை அவர் படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க்.. https://behindwoods.com/bgm8