திடீரென ‘டேப்’ கேட்ட முகமது ஷமி.. குழம்பிப் போன அம்பயர்.. எதுக்கு கேட்டார் தெரியுமா..?
முகப்பு > செய்திகள் > விளையாட்டுபெங்களூரு அணிக்கு எதிரான போட்டியின் போது குஜராத் அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி அம்பயரிடம் டேப் கேட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஐபிஎல் தொடரின் 43-வது லீக் போட்டி இன்று (30.04.2022) மும்பை மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும், டு பிளசிஸ் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதுகின்றன. டாஸ் வென்ற பெங்களூரு அணி பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடியது. அதன்படி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 170 ரன்களை பெங்களூரு அணி எடுத்தது.
இதில் அதிகபட்சமாக விராட் கோலி 58 ரன்களும், ரஜத் படிதார் 52 ரன்களும், மேக்ஸ்வெல் 33 ரன்களும் எடுத்தனர். குஜராத் அணியைப் பொறுத்தவரை பிரதீப் சங்வான் 2 விக்கெட்டுகளும், முகமது ஷமி, ரஷித் கான், லாக்கி பெர்குசன் மற்றும் அல்சாரி ஜோசப் ஆகியோர் தலா 1 விக்கெட் எடுத்தனர்.
இந்த நிலையில் இப்போட்டியின் முதல் ஓவரை குஜராத் அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது சமி வீசினார். அந்த ஓவரின் முதல் பந்தை வீசி விட்டு நேராக அம்பயரிடம் சென்ற அவர், டேப் வேண்டும் என்று கூறினார். இதனால் அம்பயர் குழம்பிப் போனார்.
— Diving Slip (@SlipDiving) April 30, 2022
இதனை அடுத்து பந்தை ஓடி பந்து வீசுவதற்காக நிற்கும் ‘Run-up’ இடத்தின் தூரம் சரியாக தெரியவில்லை என அம்பயரிடம் முகமது ஷமி கூறினார். அதனால் பந்து வீசுவதில் சிரமம் ஏற்படுவதாக தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து உடனடியாக டேக் கொண்டு வரப்பட்டு Run-up தூரம் அளவிடப்பட்டது. இதனால் சிறிது நேரம் போட்டி தாமதமானது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது.
8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க்: http://www.behindwoods.com/bgm8/