"இது வெறும் 'டீம்' மட்டும் கிடையாது, அதுக்கும் மேல..." 'ஜடேஜா' போட்ட 'ட்வீட்'... கொண்டாடித் தீர்த்த 'சிஎஸ்கே' ரசிகர்கள்!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஐபிஎல் போட்டிகள் ஏப்ரல் 9 ஆம் தேதியன்று ஆரம்பமாகவுள்ள நிலையில், இதற்காக அனைத்து அணி வீரர்களும் வேற லெவலில் தயாராகி வருகின்றனர்.

இதில், தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, கடந்த இரண்டு வாரத்திற்கும் மேலாக, தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். தொடர்ந்து, 12 ஐபிஎல் சீசன்களில் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறிய ஒரே அணி என்ற பெருமையுடன் திகழ்ந்த சிஎஸ்கே, கடந்த சீசனில், புள்ளிப் பட்டியலில் 7 ஆவது இடம் பெற்று, லீக் சுற்றுடன் வெளியேறியிருந்தது.
இதனால், இந்த முறை நிச்சயம் தங்களது பழைய ஃபார்மை நிரூபித்து, கோப்பையை கைப்பற்றும் முனைப்பில் சென்னை வீரர்கள் உள்ளனர். மேலும், கடந்த சீசனில் தனிப்பட்ட காரணங்களுக்காக விலகியிருந்த ரெய்னா, இந்த முறை மீண்டும் அணியுடன் இணைந்துள்ளார். அதே போல, மொயின் அலி, புஜாரா, கிருஷ்ணப்பா கவுதம் உள்ளிட்ட முக்கிய வீரர்களையும், சென்னை அணி ஏலத்தில் எடுத்திருந்தது.
முன்னதாக, சென்னை அணியின் ஆல் ரவுண்டரான ரவீந்திர ஜடேஜா, ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான தொடரின் போது காயமடைந்ததால், பாதி தொடரில் இருந்து விலகினார். அதன் பிறகு, நடைபெற்ற இங்கிலாந்து தொடரிலும் அவர் இடம்பெறவில்லை. இதனால், ஐபிஎல் தொடரில் அவர் கலந்து கொள்வாரா என சென்னை ரசிகர்கள் மத்தியில் கேள்வி உருவானது.
இதனையடுத்து, காயத்தில் இருந்து முழுமையாக குணமடைந்த ஜடேஜா, சென்னை அணியினருடன் இணைந்துள்ளார். இதனால், சென்னை ரசிகர்கள், மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர். மேலும், சென்னை அணியுடன் இணைந்துள்ள ஜடேஜா தனது ட்விட்டர் பக்கத்தில், நெகிழ்ச்சிகரமான ட்வீட் ஒன்றை செய்துள்ளார்.
அதில், தோனியுடன் தான் இருக்கும் புகைப்படங்களை பகிர்ந்த ஜடேஜா, 'நான் அவரை (Dhoni) எப்போது சந்தித்தாலும், ஏதோ முதல் முறை அவரை சந்திப்பது போன்றே நான் உணர்கிறேன். 2009 ஆம் ஆண்டில், அவரை சந்தித்த போது இருந்த அதே உற்சாகம்' என குறிப்பிட்டுள்ளார்.
Whenever i meet him it feels like i m meeting him for the first time!Still Same excitement when i met him in 2009.#bonding #respectforever pic.twitter.com/Obmh9PIVAR
— Ravindrasinh jadeja (@imjadeja) April 2, 2021
ஒரு அணி என்பதைத் தாண்டி, ஒரு குடும்பத்தைப் போலவே சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் இருந்து வருகின்றனர். அதனை நிஜமாக்கும் வகையில், ஜடேஜாவின் இந்த ட்வீட் அமைந்துள்ள நிலையில், சிஎஸ்கே ரசிகர்கள், இந்த புகைப்படங்களை அதிகம் வைரலாக்கி வருகின்றனர்.

மற்ற செய்திகள்
