"அந்த 'பையன்' தோனி மாதிரி இல்ல.. 'தோனி'ய மிஞ்சுற மாதிரி வந்து நிப்பான் பாருங்க.." 'பார்த்தீவ்' படேல் நம்பிக்கை!!.. "இது தான் காரணமாம்!"
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஐபிஎல் போட்டிகள் நெருங்கி வரும் நிலையில், டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர், சமீபத்தில் நடந்து முடிந்த இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒரு நாள் தொடரின் போது காயமடைந்திருந்தார்.

அவரது தோள் பகுதியில் காயமடைந்திருந்த நிலையில், அதிலிருந்து அவர் முழுமையாக குணமடைய 2 மாதங்களுக்கு மேலாகும் என்றும் கூறப்பட்டுள்ளது. இதனால், ஐபிஎல் தொடரில் இருந்து ஷ்ரேயாஸ் ஐயர் விலகியுள்ளார். அவருக்கு பதிலாக, மற்றொரு இளம் வீரர் ரிஷப் பண்ட்டை, கேப்டனாக டெல்லி அணி நியமித்துள்ளது.
அணியில் ரஹானே, அஸ்வின், ஸ்டீவ் ஸ்மித் உள்ளிட்ட அனுபவம் வாய்ந்த வீரர்கள் இருந்தாலும், ரிஷப் பண்ட்டை கேப்டனாக்கியதை சிலர் தோனியுடன் ஒப்பிட்டுப் பேசி வருகின்றனர். அடுத்த தோனியாக ரிஷப் பண்ட் (Rishabh Pant) உருவெடுப்பார் என்றும் சிலர் கூறி வருகின்றனர். இந்நிலையில், இந்த கருத்துக்கள் பற்றி, இந்திய அணியின் முன்னாள் வீரர் பார்த்தீவ் படேல் (Parthiv Patel) பேசியுள்ளார்.
'எம்.எஸ். தோனியுடன் ரிஷப் பண்ட்டை ஒப்பிட்டு எழும் கருத்துக்களால், பண்ட் அதிக சுமைகளை எதிர்கொள்கிறார். இதற்காக, அவரும் தோனியை போல ஆக முயற்சிக்க வேண்டாம். ரிஷப் பண்ட் நினைத்தால், தோனியை விட சிறந்த வீரராக, ஒற்றை ஆளாக அணிக்கு வெற்றியைத் தேடி தர முடியும்' என பார்த்தீவ் படேல் கூறியுள்ளார்.
மேலும், 'இந்த ஆண்டு டெல்லி அணிக்கு முக்கிய வீரராக பண்ட் திகழ்வார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஏனெனில், சமீபத்தில் நடைபெற்ற சர்வதேச தொடர்களில், மிகச் சிறப்பான ஆட்டத்தை அவர் வெளிப்படுத்தினார். அதே ஃபார்மில் அவர் ஐபிஎல் தொடரில் ஆடினால், நிச்சயம் இந்த முறை பட்டையைக் கிளப்புவார்' என பார்த்தீவ் படேல் நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளார்.

மற்ற செய்திகள்
