"'சென்னை' வந்தாலே இப்டி மாறிடுவாங்க போல!.." 'மும்பை' வீரர்கள் செய்த 'அசத்தல்' சம்பவம்... வீடியோ இப்போ செம 'வைரல்'!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டு14 ஆவது ஐபிஎல் சீசன் வரும் ஏப்ரல் மாதம் 9 ஆம் தேதியன்று ஆரம்பமாகவுள்ள நிலையில், இதற்காக அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றன.

மேலும், கொரோனா தொற்றின் காரணமாக, எந்த அணிகளும் தங்களது சொந்த மைதானங்களில் நடைபெறும் போட்டிகளில் பங்கேற்காது. உதாரணத்திற்கு, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, சென்னை சேப்பாக்கத்தில், ஒரு லீக் போட்டிகளில் கூட ஆடாது. மாறாக, சென்னை அணியின் ஹோம் கிரவுண்டாக, மும்பையில் பயிற்சியை மேற்கொண்டு வருகிறது. மொத்தமாக, ஆறு மைதானங்களில் ஐபிஎல் போட்டிகள் நடைபெறவுள்ள நிலையில், அனைத்து அணிகளுக்கும் இதே நிலை தான்.
அதே போல மும்பை இந்தியன்ஸ் அணி, தங்களது முதல் 5 போட்டிகளை சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஆடவுள்ளது. இதற்காக, அந்த அணி வீரர்கள் சென்னை வந்தடைந்துள்ளனர். இது தொடர்பாக, மும்பை இந்தியன்ஸ் அணி, தங்களது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், சென்னைக்கு தங்களது வீரர்கள் வந்தடைந்துள்ளதும், சென்னையின் முக்கிய இடங்களின் காட்சிகளும் இடம்பெற்றுள்ளது.
வணக்கம், சென்னை! ஆட்டத்தை ஆரமிப்போமா? 😎#MumbaiIndians have checked in ✅💙#OneFamily #IPL2021 pic.twitter.com/P4qqGalfAD
— Mumbai Indians (@mipaltan) April 1, 2021
இதனிடையே, மும்பை வீரர்களான இஷான் கிஷான், ஆதித்யா தாரே, ரோஹித் ஷர்மா ஆகியோர் தமிழில் பேசும் காட்சிகளும் இடம்பெற்றுள்ளது. பொதுவாக, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இணையும் வீரர்களிடம், தமிழ் மொழியின் தாக்கம் அதிகமாக இருக்கும்.
ஆனால், தற்போது மும்பை இந்தியன்ஸ் அணி வீரர்கள், சென்னை வந்தடைந்ததற்கே, மிகத் தெளிவாக தமிழில் பேசி அசத்தும் நிலையில், இந்த வீடியோ ஐபிஎல் ரசிகர்களிடையே அதிகம் வைரலாகி வருகிறது.
ஏற்கனவே, ரோஹித் ஷர்மா தனியாக தமிழில் பேசும் வீடியோ ஒன்றும் ரசிகர்களிடம் அதிக வரவேற்பை பெற்றிருந்ததது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்
