புது ஜெர்சி... புது வீரர்கள்... இந்த IPL-இல் சிஎஸ்கேவின் 'கேம்' எப்படி இருக்கும்?.. மாஸ்டர் பட விஜய் பாணியில்... தல தோனியின் 'பலே' திட்டம்!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுவிஜய்யின் மாஸ்டர் திரைப்படத்தில் வரும் குட்டி ஸ்டோரி பாடலில் இடம்பெற்றுள்ள வரிகளை தோனி கூறும்படியான வீடியோவை சிஎஸ்கே நிர்வாகம் வெளியிட்டுள்ளது.
![csk dhoni reveals game plan for ipl 2021 mantra details csk dhoni reveals game plan for ipl 2021 mantra details](http://tamil.behindwoods.com/news-shots-tamil-news/images/sports/csk-dhoni-reveals-game-plan-for-ipl-2021-mantra-details.jpg)
ஐபிஎல் போட்டிகளுக்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில், 8 ஐபிஎல் அணிகளும் சிறப்பாக தங்களை தயார் படுத்தி வருகின்றன. தங்களது அணிகளை மேம்படுத்தும்வகையில் தங்களது வீரர்களை கொண்டு பல்வேறு விளம்பரங்களை செய்து வருகினற்ன.
இதில் சிஎஸ்கே அணி தோனியை பயன்படுத்தி பல்வேறு விளம்பரங்களை வெளியிட்டு வருகிறது. இந்நிலையில், விஜய் பட டயலாக்கை அவர் கூறும்படியான வீடியோவை வெளியிட்டுள்ளது.
ஐபிஎல் 2021 தொடர் ரசிகர்கள் ஆவல் ஐபிஎல் 2021 தொடர் இன்னும் சில தினங்களில் துவங்கவுள்ளது. இந்த தொடருக்காக அணியின் வீரர்கள் மட்டுமின்றி ரசிகர்களும் காத்திருக்கின்றனர். கடந்த 2019க்கு பிறகு தற்போது இந்த தொடர் இந்தியாவில் நடைபெறவுள்ளது. கொரோனா காரணமாக கடந்த தொடர் யூஏஇயில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
கடந்த தொடரில் எப்போதும் போலத்ததான் சிஎஸ்கே அணி, சிறப்பான வகையில் பங்கேற்றது. ஆனால், முன்னதாக முக்கிய வீரர்கள் விலகல், கொரோனா தாக்கம் என்று பல்வேறு நெருக்கடிகளை சந்தித்தது. எனினும், மும்பை இந்தியன்ஸ் அணியுடனான முதல் போட்டியில் சிறப்பான வெற்றியை பெற்று ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்தது.
ஆனால், அடுத்தடுத்து சோதனைகளை சந்தித்து ப்ளே-ஆப் சுற்றிற்கு கூட முன்னேறாமல் தொடரிலிருந்து விலகியது. இந்நிலையில், கடந்த ஆண்டில் விட்டதை பிடிக்கும்வகையில் இந்த ஆண்டு சிறப்பான பயிற்சிகள், புதிய ஜெர்சி அறிமுகம் என்று அந்த அணியின் அடுத்தடுத்த செயல்பாடுகள் ரசிகர்களுக்கு வெற்றிக்கான நம்பிக்கையை அளித்துள்ளது.
மேலும், சிஎஸ்கேவின் அடுத்தடுத்த பயிற்சிகள் உள்ளிட்ட வீடியோக்கள் ரசிகர்களை குதூகலப்படுத்தி வருகிறது. குறிப்பாக தோனி பேசும்படியான வீடியோக்களும் அள்ளுகிறது.
இந்நிலையில், தற்போது "ஹார்ட் வொர்க்கும் வேணும், ஸ்மார்ட் வொர்க்கும் வேணும்" என்றும், இதுவே இந்திய அணியின் தாரக மந்திரம் என்றும் அவர் பேசியுள்ள வீடியோவை சிஎஸ்கே வெளியிட்டுள்ளது.
விஜய் பட பாடல் வரிகளை தோனி பேசும் வீடியோ, அவர் என்னவோ இந்தியில் தான் இந்த டயலாக்கை பேசுகிறார். ஆனாலும் அவர் பேசும் அழகு, விஜய் படத்தின் டயலாக்கை அவர் தமிழிலேயே பேசுவது போன்ற அனுபவத்தை ரசிகர்களுக்கு அளித்துள்ளது. ஐபிஎல் போட்டிகளுக்கு தயாராக உள்ளோம் என்ற நம்பிக்கை அவரது முகத்தில் வெளிப்படும் வகையில் வீடியோ அமைந்துள்ளது.
Hardworkum venum, Smart workum venum! That's our mantra for #IPL2021! #IndiaKaApnaMantra #WhistlePodu #Yellove 💛🦁 @StarSportsIndia @IPL pic.twitter.com/YhHTn1fhOV
— Chennai Super Kings (@ChennaiIPL) March 30, 2021
![](https://www.behindwoods.com/images/spacer.gif)
மற்ற செய்திகள்
![](https://www.behindwoods.com/images/spacer.gif)